எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ரங்கநாத பெருமாள்




பாடியவர்கள்:

தொண்டரடிப்பொடியாழ்வார் மங்களாசாஸனம்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

-தொண்டரடிப்பொடியாழ்வார்

தலபெருமை:

ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.

கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

காவிரி நீர் அபிஷேகம்! : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

கம்பருக்கு அருளிய நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.

அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார
பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.

தல வரலாறு:
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2009

அரண்மனைகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும், மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் வாணிபத்தை தங்களது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தனர்.
இதன் மூலம் முத்துக்குளித்தல் தொழிலில் செல்வத்தை அள்ளிய போர்த்துக்கீசியர்கள் இக்கடல் பகுதியில் சென்ற படகுகளுக்கு வரிவசூலும் செய்து வந்தனர். 1601ல் மதுரையை ஆட்சிசெய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் தனது கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் வரி வசூலிப்பதை தடுக்கவும், அதே நேரத்தில் இராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்களை துன்புறுத்தும் கொள்ளையர்களிடமிருந்து வடமாநில யாத்ரீகர்களை பாதுகாக்கவும் முடிவு செய்து மறவர் சீமைக்கு உடையான் சேதுபதியை அரசு பிரதிநிதியாக நியமித்தார். நாயக்கரின் அதிகாரம் பெற்ற உடையான் சேதுபதி கொள்ளையர்களை அடக்கியதோடு மன்னார் கடல் பகுதியில் முத்துக்குளித்தலையும் கண்காணித்து வந்தார். அன்று முதல் மறவர் சீமையில் சேதுபதிகளின் ஆட்சி துவங்கியது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கோயில் பணி, கொடையிலும் சிறந்து விளங்கிய சேதுபதிகள் கடல் கடந்த வாணிபம், கோயில் பணிகளுக்காக,
- போகளூர் - கமுதி - சுந்தரமுடையான் - இராமநாதபுரம் - மானாமதுரை - கல்கோட்டை - அத்தியூத்து - பாம்பன் - இராமேஸ்வரம்
போன்ற பகுதிகளில் அரண்மனை மற்றும் கோட்டைகளையும் கட்டினர். ஆனால் தற்போது அரண்மனைகள், பாதுகாப்பு அரண்களாக விளங்கிய கோட்டைகள் பல சிதைந்து இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி உள்ளது. கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரண்மனை உட்பட இப்பகுதியில் உள்ள பல அரண்மனைகள் சிதிலமடைந்த நிலையில் இன்றளவும் சேதுபதி மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் நினைவுச்சின்னங்களாக காட்சி அளிக்கின்றன. 1627ல் இரண்டாம் உடையான் சேதுபதி காலத்தில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் கட்டப்பட்ட துறைமுகத்துடன் கூடிய சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் சிதிலமடைந்து உள்ளது. 1637ல் சேதுநாட்டின் மீது படையெடுத்த திருமலை நாயக்க மன்னரின் தளவாய் இராமப்பையன் படைகள் போகலூர், அரியாண்டிபுரம், அத்தியூத்து கோட்டைகளை கைப்பற்றி கிழக்கு பகுதியில் முன்னேறிச் சென்றபோது சுந்தரமுடையான்புரம் அரண்மனையும் தாக்குதலுக்குள்ளானது. அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த இந்த அரண்மனையின் முன்பு இராமர் கோயில் இருந்ததால் இப்பகுதி மக்களால் இன்று வரை இராமசாமி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
[image: http://img.dinamalar.com/data/images_news/tblSambavamnews_77471125126...] இதை தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதிகள் ஆட்சி காலத்தில் நடந்த கடல் வணிகம், கடல் போர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகும். சிதிலமடைந்த அரண்மனையை பராமரித்து நினைவுச் சின்னமாக்கினால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள சீனியப்பா தர்ஹாவை வணங்கி செல்வதுடன் சுந்தரமுடையான் அரண்மனையையும் பார்த்து செல்வர். இதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: தினமலர்

பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் பேராசிரியர்களைக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் ராஜையன் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்றார்கள். பேராசிரியர் ராஜையன் மதுரை பல்கலையில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக விளங்கியவர். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தில் [ஐ.சி.எச்.ஆர்] உறுப்பினராக இருந்தவர். பொதுவாகவே அவர்மீது கல்வித்துறையில் ஒரு மதிப்பு இருக்கிறது. அவரது தென்னிந்தியப் புரட்சி [The South Indian Rebellion ]முக்கியமான நூலாக கருதப்படுகிறது. அந்நூலை பொன்.முத்துராமலிங்கம் தழுவி தென்னட்டுப்புரட்சி என்று தமிழில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மு.கருணாநிதியின் தென்பாண்டிச்சிங்கம் என்ற நாவலுக்கு ஆதாரமும் ராஜையனின் நூலே என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜையனின் தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவராலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார்கள்.பலவாறாகத் தேடியும் அந்நூல் கிடைக்கவில்லை. இந்த நூல் பாளையப்பட்டுக்களைப் பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு பொதுவாசகனுக்கு ஏமாற்றம் அளிப்பது என்பதே என் எண்ணமாகும்.
சிறிய இந்த நூல் பாளையப்பட்டுக்கள் உருவான வரலாறை சுருக்கமாகச் சொல்கிறது. பொதுவாக தென்னாட்டைக் கைப்பற்றி முடிசூடிய விஜயநகரத்தளபதி விஸ்வநாத நாயக்கர் காலத்தில் [1528-1564] அவரது தளவாயாக இருந்த அரியநாத முதலியார் பாளையப்பட்டுகக்ளை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பேரா சத்தியநாத அய்யர் இதை எடுத்துக் கூறுகிறார்.
ராஜையன் பாளையப்பட்டு என்ற அமைப்பு முன்னரே ஏதோ வடிவில் தமிழ்நாட்டில் இருந்தது என்று ஊகிக்கிறார். தமிழ்நாட்டு அரச அமைப்பு மூன்று அடுக்கு கொண்டது. மேலே மன்னர். அவருக்குக் கீழே அவருக்குக் கட்டுப்பட்டு கப்பம் அளித்து ஆனால் காவல்பொறுப்பும் வரிவசூல் உரிமையும் கொண்டு ஆட்சிசெய்த குறுநில ஆட்சியாளர்கள். அவர்களுக்குக் கீழே கிராமத்து ஆட்சியாளர்கள். இந்த குறுநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து உருவாகியும் மறைந்தும் வருகிறார்கள். மாலிக் காபூரின் படையெடுப்பால் பாண்டிய குலம் சிதறியபோது பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த பலர் பலபகுதிகளில் குடியேறி சிறு நிலப்பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக கயத்தாற்றை தலைநகரமாகக் கொண்டு பஞ்ச வழுதிகள் என்ற பேரில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களை அரியநாத முதலியார் வென்று அழித்தார் என்று வரலாற்றில் தெரிகிறது.
எட்டையபுரம் பாளையக்காரர் உண்மையில் விஜயநகர படையெடுப்புக்கு முன்னரே சந்திரகிரியில் இருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னரிடம் இருந்து மண்ணை பெற்றுக் கொண்டு எட்டயபுரத்தை ஆள ஆரம்பித்தவர். போடிநாயக்கனூர் பாளையக்காரரும் இவ்வாறு மலையாள ஜெயத்துங்க நாட்டு மன்னனிடமிருந்தே நிலத்தைப் பெற்றார்.
அரியநாதர் இந்த ஆட்சியாளர்களை பாளையக்காரர்களாக வரைமுறை செய்து ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி பாளையப்பட்டு என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஆட்சிமுறையை உருவாக்கினார். பொதுவாக இப்பாளையப்பட்டு முறை ஒருவகை 'குத்து மதிப்பான' கணக்காகவே இருந்தது என்று சொல்லும் ராஜையன் திருவிதாங்கூர் அரசும் ராமநாதபுரம் சேதுபதி நாடும் எல்லாம் மதுரையின் பாளையங்களாக சொல்லப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு மதுரைநாட்டின் பகுதிகளாக இருந்தன என்பது கேள்விக்குறியே என்பதை விளக்குகிறார். கிழவன் சேதுபதி காலத்தில் சேதுநாடு தனியாகப்பிரிந்து சுதந்திர நாடாகியது. அதை மதுரையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1730க்குப்பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்ட திருவிதாங்கூர் வடகேரளத்தை வென்று தனிநாடாகியது. ஆற்காடு நவாப் அன்வாருதீன் கான் இலங்கையிலும் தனக்கு பாளையப்பட்டுக்கள் இருப்பதை குறிப்பிடுவதை எடுத்துக்காட்டும் ராஜையன் அவருக்கு அந்நிலப்பகுதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.
பாளையக்காரர் என்ற அமைப்பின் அடிபப்டை ஊர்களில் விளங்கிய ஊர்க்காவல் என்ற முறையே என்று விளக்குகிறார் ராஜையன். ஊர்க்காவல் தலையாரி என்னும் ஊர்க்காவலர் குழுவால் நிகழ்த்தப்படுகிறது. அதை வழிநடத்துபவர் மணியக்காரர் என்னும் ஊர்த்தலைவரும் கர்ணம் என்னும் கணக்குப்பிள்ளையும். இவர்கள் பாளையப்பட்டுகளுக்கு ஊரில் வசூலாகும் வரியை அளிக்கிறார்கள். பாளையப்பட்டுக்களுக்கும் ஊர்களுக்கும் இடையேயான தொடர்பு இதோடு முடிந்துவிடுகிறது. பாளையப்பட்டுகக்ளின் ஒரே வேலை ஊர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதுதான் .
இந்த ஊர்க்காவல் என்பது 'திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது' என்ற முறையில் அமைந்தது [பக்கம்31] என்று சொல்லும் ராஜையன் இந்த ஊர்க்காவல்படை பிற ஊர்களில் திருடுவதை தொழிலாகக் கொண்டிருந்தது என்கிறார். பாளையக்காரர்- ஊர்க்காவல் என்ற இரு அமைப்புகளும் ஒன்றையொன்று வளர்த்தன என்று சொல்கிறார்.
பாளையக்காரர்கள் போரில் மன்னரின் மைய ராணுவத்துக்கு ஆளும் ஆயுதங்களும் பணமும் அளித்து உதவ வேண்டும். பாளையம் என்றாலே வைப்புராணுவம் [ரிசர்வ் ஆர்மி] என்றுதான் பொருள். ஆனால் மைய அரசு வலுவாக இருந்த நாட்களில் மட்டுமே பாளையக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் மையராணுவத்தின் வேலையே பாளையக்காரர்களை கட்டுபப்டுத்துவதுதான். திருமலை நாயக்கர் காலத்தில் எட்டையபுரம் நாயக்கர் தலைமையில் பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்ய அதை ராயர் ராமநாத புரம் சேதுபதியை அனுப்பி அடக்கினார். அந்த ராமநாதபுரம் சேதுபதியே பின்னர் மங்கம்மாள் காலத்தில் கலகம் செய்தார்.
பாளையக்காரர்கள் பெரும்பாலும் நேர்போர் செய்வதில்லை என்று ராஜையன் சொல்கிறார்.[ பக் 35] போர் என வந்தால் உடனே நாட்டை கைவிட்டுவிட்டு காடுகளில் ஏறிச் செல்வது அவர்களின் வழக்கம். அதாவது அவர்களுக்கு காவல் வரி கட்டிய மக்கள் எதிரியின் கருணைக்கு விடப்படுவார்கள். காரணம் பாளையக்காரர்களில் எட்டையபுரம், போடிநாயக்கனூர், தலைவன் கோட்டை, நெற்கட்டும்செவல் ,பாஞ்சாலங்குறிச்சி போல சில தவிர பிறருக்கு பெரிய ராணுவமோ போர்பலமோ இல்லை.
இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி [வீரபாண்டிய கட்டபொம்மன்] நெற்கட்டும் செவல்[புலித்தேவன்], சிவகங்கை [மருதுபாண்டியர்]போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.
வெள்ளையர் பாளையக்காரர்களுடன் நடத்திய போர்களை குறிப்பிட்டு பாளையக்காரர்களின் ராணுவபலத்தை முற்றிலும் இல்லாமல்செய்ததை விவரிக்கிறார் ராஜையன். அவர்கள் பிற்பாடு வெறும் வரிவசூல் முகவர்களாக ஆனார்கள். சுதந்திர இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டார்கள். இந்நூலின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் வெள்ளை ஆட்சிக்கும் நடந்த பூசலும் பின்னர் மருது சகோதரர்களின் கலகமும் பிரிட்டிஷ் குறிப்புகளை அடியொற்றி கூறப்படுகின்றன.
*
ராஜையனின் நூலை இந்திய வரலாற்றாய்வில் இருக்கும் ஒரு சமகாலப்போக்கின் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் உள்ள திறனையே முதன்மைத்தகுதியாகக் கொண்டு இயங்கும் ஓருவகை 'குமாஸ்தா' ஆய்வு இது. [சமகாலத்தில் இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்] ஆங்கில நூல்களை மட்டுமே நம்பி தமிழக ஆய்வைச் செய்வதும் தமிழ் தெரிவதனால் கிடைக்கும் சர்வ சாதாரணமான தகவல்களை அரிய ஆய்வுத்தகவல்களாக ஊடே தெளித்து விடுவதும் இவர்களின் வழிமுறை. இந்த நூல்களுக்கு மேலை ஆய்வாளர் மத்தியில் வரவேற்பு இருப்பது இவர்கள் அடையும் பதவிகள் அங்கீகாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது. ஆனால் வரலாற்றை அறிய ஆவலுடன் படிக்கும் தமிழ் வாசகனுக்கு இந்நூல்கள் அளிப்பது ஆழமான ஏமாற்றமே.
ராஜையன் பிரிட்டிஷ் ஆவணங்களை மட்டுமே நம்பி இந்நூலை எழுதியிருக்கிறார். பாளையப்பட்டுக்களின் தோற்றம் அவற்றுக்கிடையே உள்ள உறவுச்சிக்கல்கள் குறித்து இந்நூலில் எதுவுமே இல்லை. சாதாரணமாக தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த தகவல்கள் கூட இல்லை. எட்டையபுரம்,சொக்கம்பட்டி முதலிய பெரும்பாலான பாளையப்பட்டுக்கள் அவர்களுடைய தோற்றுவாய் வம்சவரலாறு முதலியவற்றை பேணி சிறு நூல்களாகக்கூட வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பல்லாயிரம் ரூபாய் செலவில் லண்டன் நூலகத்துக்குச் செல்லத்துணியும் ராஜையன் நூறு ரூபாய் செலவிட்டிருந்தால் மதுரையில் இருந்து எட்டையபுரத்துக்கும் தெற்கேயும் வந்து பலமடங்கு தகவல்களைச் சேர்த்திருக்கலாம்.
எட்டையபுரத்துக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் எப்போதுமே பூசல்தான். எட்டையபுரம் நாயக்கர்கள் தொட்டியருக்குள் சில்லவார் குலம். பாஞ்சாலங்குறிச்சி நாயக்கர்கள் அதே சாதியில் தொக்லவார் குலம். இந்த வேறுபாடு உருவாக்கிய சிக்கலை நாம் 'பேட்'டின் ஆவணப்பதிவில் காண்கிறோம். சமகால வரலாற்றை அறிய முயலும் வாசகனுக்கு இம்மாதிரி தகவல்கள் மிக முக்கியம். ராஜையன் இந்த விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.
பாளையப்பட்டுக்களைப் பற்றி ஆங்காங்கே தமிழில் எழுதப்பட்டுள்ளது. அவை அறிவியல் சார்ந்தவையாக இல்லாமல் குலவரலாறாகவே உள்ளன. இவற்றை விரிவாகத்தொகுத்து அறிவியலடிபப்டையில் நோக்கினாலே நல்ல வரலாறுகளை எழுத முடியும். ஜகவீர பாண்டியனார் தன் பாஞ்சலங்குறிச்சி வீரவரலாறு நூலில் 72 பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுவதை அ.கி.பரந்தாமனார் அவரது 'மதுரை நாயக்க வரலாறு' நூலில் சொல்கிறார்.
அவை, பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை,காடல்குடி, குளத்தூர்,மேல்மாந்தை, ஆற்றங்கரை,கொல்லம்பட்டி, கோலார்பட்டி, கடம்பூர், மணியாச்சி,தலைவன் கோட்டை, நெற்கட்டுச்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை,சேற்றூர், சிவகிரி,சிங்கம்பட்டி,அழகாபுரி,ஊர்காடு, சுரண்டை,சந்தியூர், ஏழுமலை,இராசாக்கநாயக்கனூர்,கோட்டையூர், மருங்காபுரி,மன்னார் கோட்டை, பாவாலி,இலக்கையனூர், முல்லையூர்,கடவூர், இடையகோட்டை,நிலக்கோட்டை, தேவாரம்,இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், கம்பம்,காசையூர், வாராப்பூர்,தோகைமலை, படத்தூர், ஆய்குடி, சமுத்தூர்,விருப்பாட்சி, படமாத்தூர்,கண்டவநாயக்கனூர், காமயநாயக்கனூர், தும்பிச்சி நாயக்கனூர், நத்தம் வெள்ளியக்குன்றம்,மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி நாயக்கனூர்,சக்கந்தி, பதவல நாயக்கனூர்,ரோசலப்பட்டி, வீரமலை,பெரியகுளம், குருவிக்குளம், ஆத்திப்பட்டி, இளசைபட்டி, மதுவார்பட்டி,கோம்பை, கூடலூர்,கவுண்டன்பட்டி,குமாரவாடி, உத்தப்ப நாயக்கனூர், கொல்லக் கொண்டான்-- என்று சொல்லபப்டுகிறது. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பாளையப்பட்டுக்களின் வாரிசுகள் இன்றும் உள்ளன. இவர்களை அணுகி ஆய்வு செய்வதன் மூலமே இவ்வரலாற்றை எழுத இயலும். மாறாக ராஜையன் பிரிட்டிஷ் நூல்களைப் பார்த்து பாளையப்பட்டுக்களை எண்ண முயல்கிறார்
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் இந்நூலை வாசிக்கும் ஒருவர் இதில் மேலதிகமாக என்ன இருக்கிறது என்ற ஆச்சரியத்தையே அடைவார். சில சிறு தகவல்கள் சிற்சில ஊகங்கள் அவ்வளவுதான். ஆனால் முன்னர் சொன்ன பிரிட்டிஷ் எழுத்துக்கள் மிகமிக விரிவானவை. அவற்றின் தகவல்கள் ஒரு நவீன வாசகனுக்கு பெரும் களஞ்சியம் போன்றவை. உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னிக்குட்டி மறவர்கள். இவர்கள் வன்னியர்கள் அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.
ராஜையன் எழுதிய நூலில் இத்தகைய விவரங்கள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட கோனார் நோட் போடுவதுபோல இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம் கல்விதுறை அறிவுஜீவிகள் படிப்பவற்றைக் குறிப்பெடுத்து மீண்டும் எழுதுவதில் மட்டுமே தேர்ச்சி உடையவர்கள்.
இந்நூலின் பின்னடைவில் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்கள் மற்றும் ஆவணங்களை ராஜையன் பட்டியலிட்டுச் சொல்கிறார். அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்தார் என்பதை எவ்வளவு தேடியும் நூலுக்குள் கண்டடைய இயலவில்லை.
எவ்வளவோ கேள்விகள் உள்ளன. பாளையக்காரர் என்ற முறையின் வேர்கள் எங்குள்ளன? முற்கால சோழ பாண்டிய ஆட்சிகளில் இருந்த வேளிர்கள், கடல்சேர்ப்பர்கள், குறவ மன்னர்கள் போன்றவர்கள் அடங்கிய அமைப்புக்கும் இதற்கும் ஏதேனும் தொடப்புச்சரடு உண்டா? பிற்கால சோழ பாண்டிய அரசுகளில் இருந்த குறுநில அரசர்களின் வம்சங்களுக்கும் இதற்குமான உறவு என்ன? பாளையக்காரர் முறை எவ்வகையிலேனும் அதிகாரப்பரவலுக்கும் பலவகை சாதிகள் உரிய பங்கைப்பெறும் ஒரு ஜனநாயக அமைப்புக்கு அவை உதவினவா?
அதற்கெல்லாம் பதில் தேட மீண்டும் நெல்சன்,பேட் போல ஏதேனும் வெள்ளையர்கள் வந்துதான் ஆய்வுசெய்யவேண்டும் என்று படுகிறது.இந்திய அரசும் பல்கலை மானியக்குழுவும் அதற்காக ஏதேனும் நிதியுதவிகள் செய்யலாம்.இவ்வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு அளிக்கும் பலகோடிகளில் சிறுபகுதியை ஒதுக்கினாலே போதுமானதாக இருக்கும்.

புதுகோட்டை கல்வெட்டொன்று

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு 'காரையூர்ப் பறையன்' என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். 'குதிரைக்கிப் புல்லிடும் பறையர்' என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் 'உழப்பறையர்' என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை 'அரையன் அணுக்க கூவன் பறையனேன்' என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

சேதுபதி நாட்டின் தளபதி

மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.
மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.தொடரும் . . . . . . . .
வீரமும் திறமையும் வெளிப்படுதல்
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. .
முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்
சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.
இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.
வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.
இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3
விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.
சிவகங்கைச் சீமை மீட்பு - 41772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு
அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்.”எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்”என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.
அறப்பணிகளும் மக்கள் தொண்டும்
வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.
காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்துவீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து
ஆங்கிலேய படையெடுப்பு - 5இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.
போர் பிரகடனம்:
சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.
இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.
தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.
நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..

சேதுபதி அரசில்

``தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளா வழியாக ஓடும் ஆறுகள் அரபிக்கடலில் விழுந்து வீணானாலும் வீணாகட்டும். தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர மாட்டோம்'' என்று இந்திய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் சொல்லும் கேரளா, கருநாடகம் காவிரிநீர் உரிமையில் நடுவணரசின் ஆணைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைத் துச்சமாக எண்ணித் தூக்கி எறிந்து விட்டு, தமிழகத்தை வஞ்சித்து நெஞ்சுயர்த்தி நிற்கும் நிலையைக் கண்டு தானும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமையே இல்லை என்ற இறுமாப்பில் துள்ளுவதாகத் தெரிகிறது.ஆம்; கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு அச்சுதானந்தன் அவர்கள், தற்போது தமிழகத்தை ஆளும் கூட்டணியில் தனது ஆட்சியும், கேரளத்தில் தனது பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், ``போக்கிரித்தனமான வாடகைதாரர் போல தமிழகம் நடந்து கொள்கிறது.'' என்று தடித்த சொல்கொண்டு தாக்கியிருக்கிறார். ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் புஷ் போல தோழர் அச்சுதானந்தன் மிரட்டுவதும், அதை இங்குள்ள தோழர்கள் வேடிக்கை பார்ப்பதும் அடுக்கவே அடுக்காது.திருவாங்கூர் உண்மை காவிரியில் கருநாடகத்தின் தடாலடிப்போக்கை, இந்தியச் சட்டத்தையும் அனைத்துலகச் சட்டத்தையும் அவமதிக்கும் போக்கை நடுவணரசு தடுத்து நிறுத்தாததாலும், முல்லைப் பெரியாறு அணைபற்றி ஆங்கிலேயரின் கீழிருந்த அன்றைய சென்னை மாகாண அரசு, அன்றிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்போட்டு, அதனடிப் படையில் அந்த அணை கட்டப்பட்டு, அன்றைய மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டதாலும், பழைய வரலாற்று உண்மைகளை மறந்துவிட்டு, மலையாளிகள் இப்படி வம்படி வழக்கில் இறங்குகின்றனர்.உள்ளபடி திருவாங்கூர் அரசு என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதே ஆகும். `திரு அதங்கோடு' என்பதே `திருவிதாங்கூர்' என மருவி, பின்னர் திருவாங்கூர் ஆனது என்பது சரித்திரம்.கொச்சியும் திருவாங்கூரும் இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அத்தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்தவர் `அதங்கோட்டு ஆசான்' என்பவர் என அத்தொல் காப்பியப் பாயிரம் பகர்கிறது. `வேணாட்டு அரசு' என்று குறிக்கப்படும் அதன் பழைய ஆவணங்கள் - கல்வெட்டுகள், செப்பேடுகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கின்றன. கடைசிக்காலம் வரை அது புழக்கத்தில் விட்ட நாணயங்கள், அதன் தலைநகரம் பத்ம நாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகும்கூட `ஒருசக்கரம்' இரண்டு சக்கரம்' எனத் தமிழில் தான் அமைந்திருக்கின்றன.மிகமிகப் பிற்காலத்தில் தான் அந்த அரசபரம்பரை நம்பூதிரிப் பிராமணர்கள் செல்வாக்குக் காரணமாக மலையாள மரபிற்கு மாறியிருக்கிறது. அதுவும் கொச்சி சமஸ்தானத்துடன் 1949 ஜூலை 1ஆம் தேதி இணைந்து ``திருவாங்கூர்-கொச்சிராஜ்யம்'' என்று ஆனபிறகே அது மலையாளமயமாகியிருக்கிறது. திருவாங்கூர் பகுதியின் தமிழ்த்தன்மையை நீடிக்க விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து வகையிலும் சிறந்த நகராக `கொச்சி' இருந்தும் பொதுத் தலைநகரமாக திருவனந்தபுரம் ஆக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.இலங்கை போன்ற வெளிநாடுகளில் இன்றைய கேரளா உருவாவதற்கு முன்பு மலையாளிகள் மிகுதியாக வாழ்ந்த இடங்கள் `கொச்சிக்கடை' என்று அழைக்கப்பட்டதே யொழிய, `திருவாங்கூர் கடை' என்று வழங்கப்படவில்லை என்பதே இதனை மெய்ப்பிக்கும்.திரு-கொச்சி தமிழர்கள் திருவாங்கூ ர் சமஸ்தானம் தனியாக இருந்தவரை அதன் நிர்வாகத் தலைவர்களாக பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே இருந்துள்ளனர். தங்கள் அரசபரம்பரை மலையாள மயமானதை எதிர்த்துத்தான் குடிமக்களில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள், ஏனைய (தமிழ்நாட்டு) தமிழ்ப் பகுதியோடு இணைய வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள்.அதனால்தான் 1920ஆம் ஆண்டு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய காங்கிரசின் மாகாணக் கமிட்டிகளின் பெயர்களைக் காந்தியார் மொழிவழியாக மாற்றியமைக்க முற்பட்டபோது அந்தத் தமிழர்கள் தமிழ்நாடு காங்கிரசோடு இணைய வேண்டும் என்று கோரினார்கள். அக்கோரிக்கையை அன்றிருந்த தமிழ்நாடு காங்கிரசே ஏற்க மறுத்தபோதுகூட அவர்கள் ``திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்'' என்று தனியே செயல் பட்டார்களேயொழிய, கேரளப்பிரதேச காங்கிரஸ் வருந்தி வருந்தி அழைத்தும் அதனோடு சேரவில்லை.அந்த 2000 சதுர மைல் பரப்பு உள்ளபடி `கேரளா' என்ற சொல்லாட்சியே 1920க்குப் பிறகுதான் வழக்காற்றில் வரத் தொடங்கியது. ஆனால் ``வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்'' என்றும், ``இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்'' என்றும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழக்காற்றில் இருந்து வருகிறது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே``நீலத் திரைகடல்ஓரத்திலே - நின்றுநித்தம் தவம்செய்குமரி எல்லை - வடமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு''என்று, பாரதி போன்றோரால் பாட முடிந்தது. மேலும் அத்திருவாங்கூர். - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ் தாய்த் தமிழகத்துடன் சேரவேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடினார்களே அந்தக் கோரிக்கையில் அவர்கள் உரிமை கோரிய 2000 சதுரமைல் பரப்பளவில் இந்த முல்லைப் பெரியாறு அணைக் கட்டுப் பகுதியும் அடங்குவதாகும்.அப்படியிருக்க, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் சென்னை மாகாண அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக அது கேரளவுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாட முடியாது. அது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய நூலான சிலப்பதிகாரத்திலேயே``நெடியொன் மார்பில் ஆரம்போலபெருமலை விளங்கிய பேரியாறு''என்று, எந்த ஆற்றில் `தமிழ்நாட்டுக்கு உரிமையில்லை' என்று இன்று கேரளா சொல்கிறதோ, அந்தப் பெரியாறு குறிக்கப்படுகிறது. அதுபோல மலையாளப் பழைய இலக்கியம் உண்டா? அதிலே இப்படிக் குறிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் கிடையாது.சேது அரசின் தீர்க்கதரிசனம் பெரியாற்றைக் கிழக்கு நோக்கித் திருப்பி, அதை வைகை ஆற்றுடன் இணைக்க வேண்டும் என்ற யோசனை வெள்ளைக்காரர்களுக்குத்தான் முதன்முதலில் உதித்தது என்று சொல்வதும் உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனென்றால், வைகையாற்றின் முடிவிடத்தில் இராமநாதபுரத்தில் அரசோச்சிய சேதுபதி மன்னர்களே இதை முதன்முதலாக முன்னெடுத்தனர். 1798ஆம் ஆண்டே சேதுபதி அரசில் அமைச்சராக இருந்த முத்திருளப்ப பிள்ளை என்பார் பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்கவும் அதன்மூலம் ``வையை என்ற பொய்யாக் குலக் கொடி'' என்னும் சிலப்பதிகாரப் புகழை நிலைநிறுத்தவும் ஒரு அறிஞர் குழுவை அமைத்து, அக்குழுவை பெரியாறு, வைகை தோன்றுமிடங்களுக்கே, அனுப்பி வைத்தார். அக்குழுவினரும் சம்பந்தப்பட்ட இடங்களை யெல்லாம் நேரில் சென்று பார்வையிட்டு அத்திட்டம் நடைமுறைச் சாத்தியமானதுதான் என்று பரிந் துரைத்தது.நிதியும் மதியும் ஆனால், அதுபோன்ற ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்ற சேதுபதி அரசிடம் நிதிவசதி இல்லாததால், அன்றைக்கு வெள்ளையராதிக்கத்திலிருந்த சென்னை அரசிடம் உதவிகோர, சேது பதியரசுக்கு அப்பெருமை சேர்ந்து விடக்கூடாது என்று கருதி சென்னை அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது. பின்னர் அதே திட்டம் 1850-ல் சென்னை அரசினால் மேற்கொள்ளப்பட்டு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணியாளர்களிடையே பரவிய தொற்று நோய் காரணமாக நின்றுபோனது.அடுத்து 1867-ல் மேஜர் ரைவ்ஸ் என்பார் 162அடி உயர மண் அணையை பெரியாற்றிலே ஏற்படுத்தி, மலையை வெட்டிக் கால்வாய் அமைத்துத் தண்ணீரைத் திருப்பலாம் என்று ஒரு திட்டத்தை ஆக்கியளித்தார். அத்திட்டம் போதிய விவரங்களோடு இல்லை என்று கூறி, அதுபற்றிச் சரியான திட்டத்தைத் தயாரித்தளிக்க 1868-ல் பென்னிகுய்க் நியமிக்கப்பட்டார். என்ன காரணத்தாலோ அவர் மாற்றப்பட்டு 1870-ல் ஸ்மித் என்பாரிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.தமிழரின் நீர் மேலாண்மை ஆயினும், ``175அடி உயரத்தில் இவ்வணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற போதிய பட்டறிவும் திறமையும் கொண்ட பொறியாளர்கள் இங்கு கிடையாது'' என அன்று சென்னை மாகாணத் தலைமைப் பொறியாளராக இருந்த ஜெனரல் வாக்கர் ஆட்சேபித்ததால், சென்னை அரசு அத்திட்டத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தது.பிரித்தானிய அரசோ ``பாசனப் பணிகளில் இந்தியப் பொறியாளர்களுக்குள்ள பட்டறிவும் திறமையும் உலகில் வேறு எந்த நாட்டுப் பொறியாளர்களுக்கும் கிடையாது'' என்று கூறி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கல்லணையை உதாரணமாகவும் எடுத்துக் காட்டித் திருப்பியனுப்பியது. எனவே இத்திட்டத்தை மீண்டும் பென்னி குய்க் அவர்களிடம் ஒப்படைத்து 8-5-1882-ல் சென்னை அரசு ஆணை பிறப்பித்தது. இது வரை திருவாங்கூர் சமஸ்தானம் இச்சித்திரத்தில் இடம் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பென்னி குய்க் இத்திட்டப் பணிகளை மும்முரமாக முடுக்கிவிட்ட பிறகே அணைகட்டுமிடம் தனக்குச் சொந்தமானது என்று திருவாங்கூர் அரசு ஆட்சேபித்தது.1886 ஒப்பந்தம் அதனால் 1886 அக்டோபர் 29ஆம் நாள் 999ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 1) பெரியாறு அணைகட்டத் திட்டமிட்ட இடத்திலிருந்து அணைகட்டி நீர்தேங்கும் பகுதியில் 155அடி நிலமட்டம் வரை உள்ள 8000 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.2) அணைகட்டியபின் இந்த 8000 ஏக்கர் நிலமருகே மற்ற கட்டுமானங்களுக்காக 100 ஏக்கர் பயன்படுத்திக் கொள்ளலாம்.3) இந்த 8100 ஏக்கரில் அணை கட்டுவதற்கும் அதன் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் உரிமை4) இந்நிலப்பரப்பின் மீது விழும் மற்றும் ஓடும் தண்ணீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ள உரிமை.5) இந்நிலப்பரப்பில் (அப்போது) உள்ள காடுகள் ஒப்பந்தகாலத்தில் புதிதாக வளர்க்கப்படும் மரங்கள் அனைத்திற்கும் உரிமை.6) இந்த அணையிலும், குளம், குட்டைகளிலும் மீன்பிடிக்கும் உரிமை.7) இப்பகுதிகளில் அணை கட்டும்போதும் அதன்பின்பும் ஆட்கள், வாகனங்கள் போக்குவரத்திற்காக சாலைகள் அமைக்கும் உரிமை. இதற்காக ஏக்கருக்கு ஆண்டிற்கு ரூ.5 குத்தகை செலுத்த வேண்டும்.999 ஆண்டுகளுக்குப்பின் மற்றொரு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதும் அவ்வொப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டது. அதில் அப்போது திருவாங்கூர் சமஸ்தானம் சார்பில் கையெழுத்திட்ட அதன் திவான் வி.இராமையங்கார் என்பாரும் தமிழ்நாட்டுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் 19 ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.ராமநாதபுரத்தை கி.பி.1725ல் ஆண்ட முத்து விஜயரகுநாதசேதுபதி இலக்கியத்திலும் கலையிலும் ஈடுபாடு உடையவர். இதனால் ராமநாதபுரம் அரண்மனையின் மையப்பகுதியில் உள்ள ராமலிங்கவிலாசத்தில் அழகிய ஓவியங்களை தீட்ட செய்தார்.
இதில் புகழ்பெற்ற கோயில்கள், ராமாயண, பாகவத காட்சிகள், மற்றும் சேதுபதி வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. ரகுநாத சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் நடந்த போர், சேதுபதிக்கு மதுரை நாயக்கர் ரத்தின பட்டாபிஷேகம் செய்தது, அவரை மேலைநாட்டவர்கள் வந்து பார்த்தது போன்றவை ஓவியத்தில் இடம் பெற்றுள் ளன. மேல்மாடியில் உள்ள ஓவியங்களில் சேதுபதி இசை நடனம் கண்டுகளிப்பது அவரது அகவாழ்வின் சில நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
ராமலிங்கவிலாசத்தில் கட்டபொம்மனை ஜாக்சன்துரை கைது செய்ய முயன்றபோது தப்பினார். அப்போது விவாதம் நடந்த தர்பார் மண்டபமும் மக்களின் பார்வைக்காக உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க பல நிகழ்வுகள் நடந்த ராமலிங்கவிலாசத்தில் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்திய ரோமானிய பானை ஓடுகள், 17ம் நூற் றாண்டில் பயன்படுத்திய சேதுபதி செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்களான கட்டாரி, மரவளரி, வாள், கேடயம், துப்பாக்கி, கத்திகள், மாப் பிள்ளை கல், ஈட்டிகள் என பல்வேறு பொருட்களும் பார்வைக்காக உள்ளன.
இது மட்டுமன்றி திருமலை நாயக்கருக்கு ரகுநாதசேதுபதி உறுதுணையாக இருந்ததால் "திருமலை' என்ற பட்டம் கொடுத்து தங்கத்திலான ராஜராஜேஸ் வரி சிலையையும் தந்தார் நாயக்கர். இந்த அம்மன் தான் சேதுபதிகளின் குலதெய்வமாக இருந்து உள்ளது. இதுவே இன்றும் அரண்மனையில் கோயிலாக வீற்றுள்ளது .ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் ராமலிங்கவிலாசத்துக்கு ஒருமுறை சென்றுவந்ததாலே வரலாற்று சிறப்புமிக்க பல தகவல்கள் கிடைப்பதுடன் மன்னர்கள் ஆண்ட அரண் மனை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட் கள், கலை ரசனைகளையும் அறியலாம்.

விஜயரகுநாதத் தொண்டைமான் கடிதம்


விஜயரகுநாதத் தொண்டைமான் கடிதம்ராஜகிரி கஸ்ஸாலி

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக்கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர். திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் ‘தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. ‘இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினையல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். "வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர்களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களிலிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டையின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை "வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

சமூக நினைவுகளும் வரலாறும்

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.அடித்தள மக்கள் தம்வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் பாலியல் வன்முறையும் ஒன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது தொடர்கிறது. இராமநாதபுரம் மன்னர்களின் ஆட்சியில் அடித்தள மக்களின் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை குறித்த சமூக நினைவுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.இராமநாதபுரம் மன்னர்கள்: இராமநாதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர். தனது இலங்கைப் படை எடுப்புக்கு உதவியாக இருந்தமைக்காக இப்பகுதியைக் காவல் செய்யும் பொறுப்பை சேதுபதி மரபினரிடம் இராஜராஜ சோழன் வழங்கினான் என்ற கருத்து உண்டு (இராமசாமி 1990-175). லங்காபுரன் என்ற ஈழ அரசனின் தளபதியால் நியமிக்கப் பட்டவர்களே சேதுபதிகள் என்ற கருத்தும் உண்டு (மேலது). கி.பி .1604ல் இராமநாதபுரம் பகுதிக்கு சேதுபதியாக, போகளூரை ஆண்டுவந்த சடையக்கத் தேவர் உடையார் என்பவரை முத்துக்கிருஷ்ண நாயக்கர் (1601-1609) என்ற மதுரை நாயக்கர் மன்னர் நியமித்தார்.இதன் அடிப்படையில் நோக்கும்போது இராமேஸ்வரம் பகுதியை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு மதுரை நாயக்கராட்சிக்குக் கட்டுப்பட்ட மன்னராக விளங்கியவர்கள் சேதுபதி என்ற பட்டத்துக்குரியவர்களாக விளங்கினர் என்று கூறலாம்.கிழவன் சேதுபதி (1674-1710) என்ற சேதுபதி மன்னன், மதுரை நாயக்கர்களின் மேலதிகாரத்திலிருந்து தம் ஆட்சிப்பகுதியை விடுவித்துக் கொண்டு தனிநாடாக ஆக்கினார். அத்துடன் போகளூரிலிருந்த தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றினார்.கி.பி.1792ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் சேதுபதி பரம்பரை கொண்டுவரப்பட்டது. 1803ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் தகுதி, ஜமீன்தார் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டு இராமநாதபுரம் ஜமீன் என்று அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதி அழைக்கப்படலாயிற்று.சேதுபதி மன்னர்கள் தமிழ், தெலுங்கு வடமொழிப் புலவர்களையும் இசைவாணர்களையும் ஆதரித்துள்ளனர். இராமநாதபுரம் அரண்மனைச் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள், ஓவியக்கலையின் மீது சேதுபதி மரபினர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தின. சமய வேறுபாடின்றி இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கியுள்ளனர்.விவேகானந்தரின் சிக்காக்கோ பயணத்திற்கு உதவி செய்தவர் பாஸ்கர சேதுபதி (1889-1903) என்ற இராமநாதபுரம் சேதுபதி மன்னர்தான். இவரது உறவினரும் பாலவநத்தம் ஜமீன்தாருமான பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி நிறுவிய சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி உதவி செய்ததுடன் அதன் தலைவராகவும் பணியாற்றினார். நான்காம் தமிழ்சங்கம் என்று கூறப்படும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை 1901 செப்டம்பர் 4 ல் நிறுவினார். இதற்கு பாஸ்கர சேதுபதி நிதிஉதவி புரிந்தார். ரா.இராகவையங்கார், மூ.இராகவையங்கார் போன்ற தமிழ் அறிஞர்கள் இச்சங்கத்தில் பணியாற்றினர். ‘செந்தமிழ்’ என்ற இதழையும் இச்சங்கம் வெளியிட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட இராமநாதபுரம் ஜமீன் ஆட்சியில் குடிமக்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை தொடர்பான சமூக நினைவுகள் இரண்டை இனிக்காண்போம்.ஆளுவோரின் பாலியல் வன்முறைஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆட்சிபுரிவோர் தம் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என அனைத்தின் மீதும் அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றவராக இருந்தனர். இதற்கு மனிதர்களும் விலக்கல்ல. மனித உடலின் மீது வன்முறையைப் பயன்படுத்தவும் உயிரைப் பறிக்கவும் அவர்கள் உரிமை படைத்தவர்களாக இருந்தனர். இந்த அதிகாரத்தின் அடிப்படையில், அழகிய பெண்களைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் அவர்கள் தயங்கியதில்லை. படையெடுப்புகளின்போது தமிழ் மன்னர்கள் பெண்களைக் கவர்ந்து வந்ததை, இலக்கியங்களும் கல்வெட்டுகளும் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.மன்னனின் மனைவியராக மன்னர் குடிப்பிறப்புடைய பெண்கள் அமைந்தனர். இவர்தம் மகன்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உரிமை படைத்தவர்களாக விளங்கினர். மன்னனது மறைவிற்குப்பின் அவனது அந்தபுர பெண்டிர் நிலை கேள்விக்குரியது. இந்தப் பின்புலத்தில் ‘மகட்கொடை மறுத்தல்’ என்ற துறையை ஆராய இடமுண்டு. தம் ஆளுகையின் கீழுள்ள பெண்களை விலைக்கு வாங்கியும், பெற்றோரை அச்சுறுத்திக் கவர்ந்து வந்தும் அந்தபுர மகளிராக மன்னர்கள் ஆக்கிக் கொண்டனர்.இச்செயலைச் ‘சிறை எடுத்தல்’ என்று குறிப்பிட்டனர். பெண்ணைப் பாதுகாத்து இல்லத்தில் வைத்திருப்பதை ‘சிறை காத்தல்’ என்று வள்ளுவர் (குறள்:57) குறிப்பிடுகிறார். பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைக் காதலன் அழைத்துச் செல்வதையும், மன்னர்கள் அதிகாரத்தின் துணையுடன் கவர்ந்து செல்வதையும் ‘சிறையெடுத்தல்’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.ஆளுவோரின் அதிகாரத்தைச் செலுத்தும் தளங்களில் ஒன்றாகப் பெண்ணின் உடல் நிலவுடமைச் சமூகத்தில் விளங்கியது. ஐரோப்பாவில் குடியானவப் பெண்களின் திருமணத்தில் முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களுக்கிருந்தது கேரளத்தில் நம்பூதிரிகள் இவ்வுரிமையைக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் ‘சிறையெடுத்தல்’ வாயிலாகப் பெண்கள் மீது தம் அதிகாரத்தைக் குறுநில மன்னர்கள் நிலை நாட்டியதற்குச் சான்றாக‘புல்லு அறுத்தா மாட்டுத் தொட்டிக்குபொண்ணு சமைஞ்சா அரண்மனைக்கு’என்ற பழமொழியைக் குறிப்பிடலாம்.ஜமீன் பகுதிகளில் வழிபடப்படும் அம்மன்களில் சில ஜமீன்தார்களின் பாலியல் வன்முறைக்கஞ்சி, பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட பெண்களின் நினைவாக உருவானவை தான். இப்பின்புலத்தில் மேலே குறிப்பிட்ட இராமநாதபுரம் ஜமீனை மையமாகக் கொண்டு இன்றுவரை வழக்கிலுள்ள இரு சமூக நினைவுகளை இனிக் காண்போம்.சமூக நினைவு: ஒன்றுமறவர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகக் ‘கொண்டையங் கோட்டை மறவர்’ என்ற பிரிவு உள்ளது. மறவர் சமூகத்தில் உயரிய பிரிவாக இதைக் கருதுவர். இராமநாதபுரம் ஜமீன்தார் செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவு தன்னைவிடத் தாழ்ந்தது என்பதே கொண்டையங்கோட்டை மறவர்களின் கருத்து. எனவே இருபிரிவினருக்கும் இடையே மண உறவு முன்னர் இருந்ததில்லை.இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் கொண்டையங்கோட்டை மறவர்களின் தலைவர் வீட்டிலிருந்த அழகிய பெண்ணொருத்தியைச் சிறை எடுக்க விரும்பினார். இது அப்பெண்ணின் தந்தைக்குத் தெரிந்துவிட்டது. இதை அவர் விரும்பாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், ஜமீன்தாரின் குலம் தம் குலத்தை விடத் தாழ்ந்தது என்பது. இரண்டாவது காரணம், மனைவி என்ற தகுதியின்றி, தன் பெண் காமக் கிழத்தியாக வாழ வேண்டிய அவலம்.ஆனால் ஜமீன்தாரின் விருப்பத்திற்கு இணங்காவிட்டால், பெண்ணை பலவந்தமாகத் தூக்கிச் சென்றுவிடுவார். அத்துடன் அவரது பகையும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் முகமாக நெருங்கிய உறவினர்களுடன் இரவோடிரவாகப் புறப்பட்டு, கால்நடையாகப் பல நாட்கள் பயணம் செய்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். நாங்குநேரி ஊருக்கு வடபகுதியில் உள்ள மறுகால்குறிச்சி என்ற கிராமத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினார். இன்றும் மறுகால் குறிச்சிக் கிராமத்தில் கொண்டையங்கோட்டை மறவர்களே அதிக அளவில் வாழ்கின்றனர். மறுகால் குறிச்சி மறவர்களின் இடப்பெயர்ச்சியை வெளிப்படுத்தும் வாய்மொழிக் கதையாகவும் இதைக் கொள்ளலாம்.சமூக நினைவு- இரண்டுஇராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம் பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும் விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு உடன்படவில்லை. மேல பார்த்த சமூக நினைவில் குறிப்பிட்ட காரணங்களே அவர் உடன்படாமைக்கான காரணங்களாக இங்கும் அமைந்தன.ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில் சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர் அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன் தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல், விடாது தேடி, வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப் பதை அறிந்து அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும்.சமூக நினைவுகளின் நம்பகத்தன்மைமேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மையை ஆராயும் முன் இதையொத்த எழுத்துச்சான்றுகள் சிலவற்றைக் கண்டறிவது அவசியம். முதாவதாக சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் மூன்றில் சிறையெடுத்தல் தொடர்பாக இடம்பெறும் செய்திகளைக் காண்போம்.முத்துராமலிங்க சேதுபதி என்பவர் தன் ஆட்சியில் அடங்கிய ஊர்களில் இருந்து ஊருக்கு ஒரு பெண்ணைச் சிறையாகக் கேட்டபோது ஆயிரமங்கலம் ஊரைச் சேர்ந்த கொளும்பிச்சரு தேவன் என்பவர் தமது மகள் முருகாயி என்பவளைச் சிறையாகக் கொடுத்தார். ஊரவர்கள் கூடி இதற்காக அவருக்கு நிலம் கொடுத்துள்ளனர். (இராசு. 1994:525-528)வயிரமுத்து விசைய ரகுநாத ராமலிங்க சேதுபதி என்பவர்க்கு மளுவிராயப் புரையார் அசையாவீரன் என்பவர் தன் மகள் முத்துக் கருப்பாயியை சிறையாகத் தந்தான். இதற்காக ஊரவர்கள் அவருக்கு நிலம் கொடுத்தனர் (இராசு, 1999: 523 -24)இதே மன்னருக்கு விசையநல்லூர் பல்லவராயப் புரையர் மொக்கு புலித்தேவன் என்பவர் அழகிய நல்லாள் என்ற தன் மகளைச் சிறையாகக் கொடுத்தமைக்காக அவருக்கு ஊரவர் நிலம் கொடுத்துள்ளதைச் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. (1994:529-30)ஊரவர்கள் கூடி தம் பெண்களைக் காப்பாற்றும் முகமாக வேறு ஒருவரது மகளைச் சிறை கொடுக்க வைத்து அதற்காக நிலம் வழங்கிய கொடுமை இம்மூன்று செப்பேடுகளிலும் காணப்படுகிறது. இச்செப்பேடுகளில் இடம் பெறும் சேதுபதிகளின் காலமும், செப்பேடு எழுதப்பட்ட காலமும் ஒத்து வரவில்லை. இது தனியாக ஆராய வேண்டிய செய்தி. செப்பேடு எழுதப்பட்டதன் அடிப்படை நோக்கம், பெண்ணைச் சிறை கேட்ட மன்னருக்குத் தன் மகளைச் சிறையாகக் கொடுத்த தந்தைக்கு, ஊரவர் கூடி நன்றிக்கடனாக நிலம் வழங்கிய செயலைக் குறிப்பிடுவதுதான். இதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளுதல் போதுமானது.பெண்களைச் சிறை எடுக்கும் இப்பழக்கத்திற்கு பெரிய நாயகம் பிள்ளை என்பவர் எழுதிய அச்சிடப்படாத சுய சரிதையும் சான்றாக அமைகிறது. அமெரிக்கன் மதுரை மிஷனில் 19ம் நூற்றாண்டில் இவர் பணியாற்றியுள்ளார். தமது சுயசரிதையில் தொடக்கத்தில், தமது முன்னோர் இராமநாதபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்ததைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.என் பாட்டனார் ஞானப்பிரகாசம் பிள்ளை இராமநாதபுரம் சமஸ்தானத்தில் சம்பிரிதி வேலை பார்த்தார். இவர் இந்து மார்க்கத்தைச் சேர்ந்தவர். இந்து மார்க்கப்பேர் ஞாபகமில்லை. இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பேர் பிரஸ்தாபமாயும், ஜமீன்தாருக்குப் பிரியமும் உண்மையும் நடந்து வந்தார். இப்படி சம்பிரதி வேலை ஒழுங்காய் நடந்து வருகிற காலத்தில், அந்தக் காலத்திலிருந்த ஜமீன்தார், இவர்கள் வீட்டுப் பெண்ணைச் சிறை எடுக்க யோசித்திருப்பதாக சமாசாரம் இவர் காதுக்கெட்டியது. அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. சடுக்கா வண்டி கிடையாது. மாட்டு வண்டிகள்கூடக் கிடைக்கிறது ரொம்ப வர்த்தமாயிருக்குமாம்.சிறையெடுக்க யோசித்திருக்கிற சமாசாரம் இவர் காதுக் கெட்டியவுடனே இனிமேல் இவ்விடத்திலிருப்பது மரியாதையில்லையென்று எண்ணி, ஊரைவிட்டுப் போகத் தீர்மானித்து நகைகளையும் எடுத்துக் கொண்டு இராத்திரியே புறப்பட்டு, பிள்ளை குட்டிகளெல்லாம் கால்நடையாய் நடந்து எட்டுநாள் போல் தங்கித் தங்கி திருநெல்வேலி போய்ச் சேர்ந்தார்களாம்.தம் முன்னோரின் இடப்பெயர்ச்சி தொடர்பாக, குடும்ப உறுப்பினர்களிடம் வந்த கர்ணபரம்பரைச் செய்தியை எழுத்து வடிவில் எழுதிவைத்ததன் வாயிலாக அச் செய்தியைப் பெரிய நாயகம் பிள்ளை ஆவணப் படுத்தியுள்ளார்.நிகழ்வும் சமூக நினைவும்இக்கட்டுரையில் குறிப்பிட்ட இரு சமூக நிகழ்வுகளும் வாய்மொழியாக வழங்கி வருபவை. இவற்றின் நம்பகத்தன்மைக்கு மேற்கூறிய எழுத்தாவணங்கள் துணைபுரிகின்றன. இந்த இடத்தில் சமூக நினைவு குறித்து பீட்டர் பார்க் (2003-44) என்பவர் கூறும் செய்தியை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.சமூக குழுக்களால் நினைவு கட்டமைக்கப்படுகிறது. அக்குழுவைச் சார்ந்த தனி மனிதர்கள் நினைவுகளை நினைவில் கொள்ளுகிறார்கள். ஆனால் அச்சமூகக் குழுக்கள் எது நினைவில் கொள்ளத்தக்கது, எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. தாங்கள் நேரடியாக அனுபவித்தறியாத ஒன்றை அவர்கள் நினைவில் கொள்ளுகிறார்கள். எனவே ஒரு குழுவினர், கடந்த கால நிகழ்வுகளைக் கூட்டாக மறுகட்டமைப்பு செய்வதே நினைவு என்று கூறலாம். இக்கூற்றின் அடிப்படையில் முதல் இரண்டு சமூக நினைவுகளை ஆராய்வோம்.முதல் நிகழ்வுடன் தொடர்புடைய தெய்வ வழிபாடு ஒன்றுள்ளது. மணியாச்சியில் இருந்து ஒட்டப்பிடாரம் செல்லும் சாலையில் உள்ள ஊர் பாறைக்குட்டம். இவ்வூரில் உள்ள அய்யன் செங்கமல உடையார் கோவிலைப் பாதுகாத்துப் பூசாரியாக இருப்பவர்கள் இடையர் சமூகத்தினர். இத்தெய்வத்திற்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு மேற்கூறிய சமூக நினைவுடன் தொடர்புடையது.இதன்படி இராமநாதபுரம் பகுதியிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு வந்த கொண்டையங்கோட்டை மறவர்கள் இவ்வூரில் இரவு நேரத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டு வரும்போது தம்முடன் தம் குலதெய்வமான சிலையையும் கொண்டு வந்திருந்தனர். அதற்குத் திருநீராட்டு செய்யப் பால் தேவைப்பட்டது. அவ்வூரிலுள்ள இடையர்களிடம் பால் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனர். மறுநாள் அங்கிருந்து புறப்படும்போது அத்தெய்வத்தின் உருவச் சிலையைத் தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சரி இது தெய்வத்தின் விருப்பம் போல என்று கருதி தம் பயணத்தைத் தொடர்ந்து இறுதியில் மறுகால்குறிச்சியில் குடியேறினர்.அவர்கள் சென்றபின்னர், பாண்டியாபுரம் கிராமத்து ஆயர்களின் கால்நடைகள் இறந்து விழத் தொடங்கின. இது குறித்து அவர்கள் குறி கேட்டபோது, அய்யன் செங்கமல உடையார்க்குப் பால் கொடுக்காமையால் அத்தெய்வத்தின் கோபத்தால் கால்நடைகள் அழிகின்றன என்றறிந்தனர். அத்தெய்வத்தின் கோபத்தைத் தவிர்க்கும் வழிமுறையாக, அதை வழிபடத் தொடங்கினர். அதன்பின்னர் அவர்களது கால்நடைகள் அழிவிலிருந்து தப்பின.மறுகால்குறிச்சியில் குடியேறிய கொண்டையங்கோட்டை மறவர்கள் தம் குலதெய்வத்தை மறக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு முதல் வெற்றிலை பாக்கு வைத்தல், புதுமணப்பெண் உறவினர்களுடன் வந்து பொங்கலிடல் ஆகிய செயல்களின் வாயிலாக, குலதெய்வத்துடனான உறவை வெளிப்படுத்தி வருகின்றனர். நோய்த்தீர, வழக்குகளில் வெற்றிபெற, குடும்பச்சிக்கல்களில் இருந்து விடுபட இத்தெய்வத்தை வேண்டிக் கொண்டு அவ்வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து விலங்கு உயிர்ப்பலி கொடுத்தல், பொங்கலிடல் ஆகிய சடங்குகளை மேற்கொள்கின்றனர். இங்கு குலதெய்வ வழிபாடு என்ற சமயச் சடங்கின் வாயிலாக கொண்டையங்கோட்டை மறவர்களின் இடப்பெயர்ச்சியும் அதற்கான காரணமும் சமூக நினைவாகத் தொடர்கின்றன.இரண்டாவது சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.ஒரு சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த நிலவுடமைக் கொடுமைகளைப் பெரும்பாலும் மரபுவழி வரலாற்றாவணங்கள் பதிவு செய்வதில்லை. ஆனால் மக்களின் சமூக நினைவுகள் அவற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வகையில் இதைப் பாதுகாத்து வருகின்றது.மறுகால்குறிச்சி மறவர்கள் தம் குலதெய்வ வழிபாட்டின் வாயிலாகவும், ஆப்ப நாட்டு மறவர்கள் ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லின் வாயிலாகவும், ஜமீன்தாரின் பாலியல் வன்முறையிலிருந்து தம் மூதாதையர்கள் தப்பியதை நினைவில் கொள்ளுகின்றனர்.தம் முன்னோர்களின் இடப்பெயர்ச்சி குறித்து வாய்மொழியாக வழங்கி வந்த மரபுச் செய்தியை பெரியநாயகம் பிள்ளை எழுத்தாவணமாக்கியுள்ளார். இது எழுத்து வடிவிலான வரலாற்றுத் தரவாக அமைந்து மேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது.தனியொரு மனிதனுக்கு ஊரவர் வழங்கிய நிலக் கொடையைத் தெரிவிக்கும் மேற்கூறிய மூன்று செப்பேடுகளும், நிலக்கொடையை வழங்கியமைக்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மேற்கூறிய இரு சமூக நினைவுகளில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள், கற்பனையல்ல, நடைமுறை உண்மையே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது.நிலவுடமைச் சமூக அமைப்பில், பெண்ணின் உடல் மீதான வன்முறையானது, தன் சாதி, அயற்சாதி என்ற பாகுபாடில்லாமல் ’சிறை எடுத்தல்’, ‘பெண் கேட்டல்’ என்ற பெயர்களால் நிகழ்ந்துள்ளது. இவற்றையெல்லாம் பல்வேறு வடிவங்களில் சமூக நினைவுகளாக மக்கள் குழு காப்பாற்றி வருகிறது. இத்தகைய சமூக நினைவுகளை முறையாகச் சேகரித்து ஆராய்ந்தால், தமிழக நிலவுடமைக் கொடுமைகளின் ஒரு பகுதி வெளிப்படும்.குறிப்பு1.சில நேரங்களில் இதற்கு மாறான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. ஆயினும் இவை விதிவிலக்கான நிகழ்வுகளே.2.கொண்டையங்கோட்டை மறவர்களிடம், ‘கொத்து’, ‘கிளை’ என்ற பிரிவுகள் உண்டு. இதனடிப்படையில் இவர்கள் உயர்வாகக் கருதப்படுகின்றனர்.3. பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியவர்களைத் தந்தை என்று போற்றும் வழக்கம் இருந்துள்ளமைக்கு செப்பேட்டுச் சான்று ஒன்று உள்ளது. 1873ஆம் ஆண்டைச் சேர்ந்த இச்செப்பேடு கூறும் செய்தியின் சுருக்கம் வருமாறு: “கோம்பையில் வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும் குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார்.இதற்கு நன்றிக் கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர் கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள் அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதான்யங்கள், அரிசி அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப்பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.” (ஸ்ரீதர், 2005 - 209) வலங்கையார் கூட்டமாக வந்த செய்தியை ‘வலங்கையார் குமுசல் கூடிப் பெண் சிரை(றை) பிடிக்க வந்ததில்’ என்று செப்பேடு குறிப்பிடுகிறது. பெண்களைக் கவர்ந்து செல்வதை ‘சிறை பிடித்தல்’ என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தமைக்கு இச்செப்பேட்டு வரியும் சான்றாகிறது.தகவலாளர்கள்: 1.தோழர் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மறுகால் குறிச்சி.2. திரு. தம்பி அய்யா பர்னாந்து, வேம்பாறுதுணை நூற்பட்டியல்:இராமசாமி, அ., 1990. தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடிகள், இராமநாதபுரம்.இராசு, செ. (பதிப்பாசிரியர்), 1994. சேதுபதி செப்பேடுகள்.பெரியநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு (அச்சிடப்படாத கையெழுத்துப்படி)ஸ்ரீதர், தி.ஸ்ரீ, (பதிப்பாசிரியர்) 2005. தமிழகச் செப்பேடுகள் , தொகுதி 1.

சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.
தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி பார்த்து விட்டு, இந்த ஊரின் அருகில் ஒரு மரத்தடியில் தமது பரிவாரங்களுடன் தங்கினாராம். அப்போது நண்பகல். நல்ல வெய்யில். மதிய சாப்பாடு முடிந்து விட்டது. உண்ட உணவு சீரணமாக தாம்பூலம் தரித்துக் கொண்டாராம். அதன் பிறகுதான் நினைவுக்கு வந்தது. இன்று என்ன திதி என வந்தவர்களிடம் கேட்டார். (சில நாட்களில் வெற்றிலை போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அது சாஸ்திர விரோதம் என்பது கருத்து) வந்தவர் எவரிடமும் சரியான பதிலைக்காணோம். அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். இக்கலைகளில் வல்லவர்கள் வந்தனர். அவர்களிடம் இதைக் கேட்டார். அவர்கள் சொன்னார்கள் 'ஆம் ராஜா! இன்று நீங்கள் தாம்பூலம் தரிக்க உகந்த நாளில்லை. இது தோஷம் என்றனர் '. ராஜாவும், இதற்குரிய பரிகாரம் என்ன என வினவ அவர்களும் நூறு பிராமணாளுக்கு மனையும் நன்செய்யும் தானம் அளித்தால் இந்த தோசம் விலகும் எனச்சொன்னார்கள். ராசாவும் ஒத்துக்கொண்டு ஓர் அக்ரகாரத்தையும், அதில் குடி இருக்கும் மக்களுக்கு நிலமும், கிணறும் உண்டாக்க ஆக்கினைகள் செய்தார். அவ்வூரே உத்தமதானபுரம் என்று வழங்கலானது.
ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் காலத்திய செப்பேடுகளின் தொகுப்பொன்றை ( தொகுப்பு:புலவர் செ.ராசு) தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதனை வாசிக்கையில் அக்காலகட்டத்தின் தமிழ் சமூகம் பற்றிய பல விடயங்கள் தெளிவாய்ப் புலனாகின்றன.
அச்செப்பேடுகள் பெரும்பாலும் சேதுபதி மன்னர்களாலும், சில சேதுபதிகளின் மனைவியராலும் தரப்பட்ட தானங்கள் பற்றியவைதான் என்றாலும் அவ்வேடுகளில் பதிந்து கிடக்கும் ஒவ்வொரு வரியிலும் காணக்கிடைக்கும் பல நுட்பமான செய்திகள் எண்ணிலடங்கா.
அரசர்களாக ஆண்ட சேதுபதிகள் மொத்தம் 15 பேர். இவர்களின் ஆட்சிப்பகுதி இப்போதைய சிவகங்கை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுள் அடங்கும். முதலாம் சேதுபதியாக, முதலாவது சடைக்கத்தேவர் என்ற உடையான் சேதுபதியும் (கிபி 1605 - கிபி 1621), கடைசி சேதுபதியாக, முத்துராமலிங்க சேதுபதியும் (1795 வரை) ஆண்டனர். பின்னர் கொஞ்சகாலம் நீதிமன்ற ஆட்சியும், பின்னர் ஜமீனாகக் குறைக்கப்பட்டு, ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சேதுபதி குடும்பத்தினர் ஜமீன்தார்களாய் ஆண்டனர்.
செப்பேட்டு செய்தி அமைப்பு முறை:
****
இவர்களின் செப்பேடுகளில் பேர்பாதி சேதுபதிகளின் பட்டப்பெயர்களும், சிறப்புக்களும் கூறப்பட்டு, இரண்டாவதாக எதன்பொருட்டு அச்செப்பேடு வெட்டப்படுகிறது என்ற 2, 3 வரிகளும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழே இச்செப்பேட்டில் கண்ட விசயத்தை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை
'இது காரியத்தில் யாதா மொருத்தர் அபிமானித்து நடத்தி வந்தார்களே ஆனால் அவர்களுக்கு கோடி கெங்கா ஸ்நானமும் பண்ணின சுகிர்தமும் கோடி தனுஷ்கோடி ஆடின கோடி கன்னியா தானம் பண்ணின பலனும் அடைவர் ' என்றும்,
(இதில் குறிக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி என்பது ராமேஸ்வரம் தீவின் கடைக்கோடியில் இருந்த ஊர். 1960களில் ஒரு பெரும்புயலில் இவ்வூர் அழிந்து போனது)
அதன் கீழே மீறுபவர்களை அச்சுறுத்த,
'கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற தோசத்திலேயும் மாதா பிதாவை கொன்ற தோசத்திலேயும் போகக் கடவர் ' எனச்சில செப்பேடுகளிலும்,
'மாதா பிதாவையும் கங்கைக் கரையிலே பிராமணர்களையும் காராம்பசுவையும் கொன்ற தோசத்திலேயும் போவார்கள் ' எனச்சில செப்பேடுகளிலும் பொதுவாய்க் காண முடியும்.
இச்செப்பேடுகளின் இவ்வாக்கிய அமைப்பிலிருந்து, அக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பசுவதை விவகாரம் பற்றிய பிரச்சாரம் இருந்திருக்கலாம் எனத்தெரிகின்றது.
இச்செப்பேடுகளின் காலத்திற்குப் பிற்பட்ட தஞ்சை மராட்டியரின் செப்பேடுகளிலும் அரசனின் சிறப்பு விருதுப்பெயர் வரிசையில் 'துலுக்கர் மோகம் தவிர்த்தோன் ' என்பது பயின்று வருவது நோக்கத்தக்கது. நம்மில் சிலர் செப்பேட்டை எழுதி இருந்தால் ஹர்ஷதேவாவுக்கு இவ்வரியை எழுத வேண்டாம் என்று பரிந்துரைத்திருக்கலாம். மராத்திய மன்னர் முஸ்லிம் மன்னர்களுடன் நட்புணர்வுடன் இல்லாமல் இருப்பது அக்காலகட்டத்தில் சிறப்பான விசயமாய் இருந்திருக்கலாம்.
இத்துடன் 21/1/1661 ல் திருமலை சேதுபதி ரகுநாதத் தேவர் வெட்டிய செப்பேட்டில் கூறப்பட்ட 'கோசாலை வரி விலக்கம் ' மூலமாக, 'கோமாதா எங்கள் குலமாதா ' எனும் கருத்துருவாக்கம் அக்காலத்திலும் இருந்தமை தெரிகின்றது.
தானங்களை 'கல்லும், காவேரியும், புல்லும், பூமியுமுள்ள வரையில் ' ஆண்டனுபவிக்கச் செய்தனர்.
சிறப்புப் பெயர்கள்:
****
சேதுபதி செப்பேடுகள் பரவலாக 'வேதியர் காவலன் ' என்று சேதுபதியை சிறப்பிக்கின்றது. மதுரை திருமலை நாயக்கரின் காலத்திற்குப் பிறகு வெட்டப்பட்ட ஏடுகளில் 'மதுரை மானம் காத்தான் ' என சேதுபதி சிறப்பிக்கப்பட்டமை, ஹெம்பையாவின் மைசூர் மூக்கறுப்புப் போரில் சேதுபதி காட்டிய தீரத்தால் மதுரை காக்கப்பட்ட நிகழ்ச்சி சொல்லா நின்றமை விசேசம். (மைசூர் மூக்கறுப்புச் சண்டை குறித்து எமது முந்தைய கட்டுரையைக் காண்க. இதில் பங்களிப்பு செய்த ரகுநாத சேதுபதிக்கு திருமலை நாயக்கர் துர்க்கை சிலை ஒன்றைப் பரிசளித்தார். அச்சிலைக்கு நரபலி தர வேண்டி இருந்ததால், அது ராஜராஜேஸ்வரி எனும் தெய்வமாய் மாற்றப்பட்டதும், அச்சிலை ராமலிங்க விலாசத்தில் (ராமநாதபுரத்தில் இருக்கும் சேதுபதிகளின் அரண்மனை) நிறுவப்பட்டதும் செப்பேடுகள் தரும் வரலாறு.
எல்லா செப்பேடுகளிலும் 'ஹிரண்ய கெர்ப்பயாஜி ' (உதாரணமாய் 'ஹிரண்ய கெர்ப்பயாஜி ஸ்ரீமது ரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவர்... ') என்று சேதுபதி குறிப்பிடப்பட்டிருக்கிறார். இதன் பொருள் யாதென்று தமிழ் அகர முதலியிலும், மோடி ஆவணங்களிலும் சொல்லப்பட்ட செய்தி என்ன என்றால்
'மன்னராய் அரியணை ஏறுபவர்கள், தங்கத்தால் ஒரு பசுமாட்டை செய்து, அதன் வயிற்றுக்குள் நுழைந்து திரும்பி வருவர். அதன் பின்னர் அந்தத் தங்கம் அந்தணருக்குத் தானமாய் அளிக்கப்படும் ' என்பதே. சேதுபதிகளும் பதவி ஏற்கும் முன், பிராமணாருக்கு பொன்னால் ஆன பசுவைத் தானமாக்கி இருக்கின்றனர். இது 'ஹிரண்ய கெர்ப்ப தானம் ' எனச் சிறப்பிக்கப்பட்டது.
பட்டக்காணிக்கைத் தானம்:
****
ஒவ்வொரு சேதுபதியும் தாம் பதவிக்கு வரும்போது 'பட்டக்காணிக்கை ' எனும் பேரில் ஒரு ஊரை இராமேஸ்வரம் கோவிலுக்கு எழுதி வைத்திருக்கின்றனர். மருதங்க நல்லூர் எனும் ஊரை தளவாய் சேதுபதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு 23/1/1632ல் எழுதி வைத்து 'நஞ்சை புன்செய் திட்டுத்திடல் சகல சமுதாயமும் ராமநாதசுவாமிக்கு பட்டக்காணிக்கையாகக் கட்டளையிட்டு ' செதுக்கி உள்ளார். இவரே இக்கோவிலுக்கு மேலும் 'சேதுகால் ' எனும் ஊரையும் தாரைவார்த்துள்ளார். ஆக 15 சேதுபதிகளும் பல ஊர்களை ராமேஸ்வரக் கோவிலிலேயே இழந்து இருக்கின்றனர்.
இக்கோவில்களுக்கு உரிய கிராமங்களை 'வளப்படுத்தி கோவிலுக்கு வளம் சேர்க்க உதவுபவர்கள், கோடி பூதானம் பண்ணின பலமும், அக்கிரகாரம் பண்ணின பலனும்(!!) ' அடைந்திருக்கின்றனர்.
மகமையும், சுதந்திரமும்:
****
ராமேஸ்வரம் கோவிலுக்கு ஊரையே தந்த மன்னர்களால் நிலவருவாய் கோவிலுக்குச் சென்றது.அதே சமயத்தில் ராமநாதபுரத்து மாரி துர்க்கையம்மனுக்கு அல்லிக்குளம் ஊரைக் கொடையாய் அளித்த ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவரின் 1659 ஆம் ஆண்டு செப்பேடு அக்கோவிலின் அன்றாடச் செலவினை 'மகமை ' மூலம் நிறைவேற்றிக்கொள்ளச் சொல்கிறது. இதன் மூலம் இன்றும் தென் தமிழ் நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் இருக்கும் மகமை முறை 350 வருசத்துக்கு முன்னரே இருந்தது தெரிய வருகிறது.
அக்கோவிலுக்கு சாதிவாரியாய்ப் பின்வருமாறு மகமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1) குடி ஒன்றுக்கு வருடக்கட்டளை ஒரு பணம்
2) சாராயக் குடிகள் பானை இறக்கும்போது கால் பணம்
3) வாணியர் ஆண்டுதோறும் 1 படி நல்லெண்ணெய்
4) பனையேறி சாணார்குடி ஒன்றுக்கு திருப்பணி வேலைக்கு 30 பலம் கருப்புக்கட்டி
....
(எங்கள் ஊரில் இன்றும் நடைமுறையில் உள்ள மகமை, ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக உள்ளது. இம்மகமை என்பது கோவிலின்பேரில் வசூலிக்கப்படும் வரியே. இதனை வசூலிக்க ஆண்டொன்றுக்கு ஒரு நபர் வசூல் குத்தகை எடுப்பார். அவர் சார்ந்திருக்கும் சாதித்தெருக்களில் நுழையும் கொய்யாப்பழ வியாபாரிக்கு கூடைக்கு 3 பழம் என்றோ, பதனீர் பானை ஒன்றுக்கு உழக்கு என்றோ வசூலித்து விடுவார். எடுத்த குத்தகைப் பணம் கோவில் கொடைக்கு என்பது நடைமுறைக்கணக்கு.)
கிழவன் சேதுபதி செப்பேடுகளில் கோவில் ஸ்தானிகருக்குக் கொடுக்கப்படுவது மகமை என்றும், கோவிலின் பிற ஊழியர்களின் உணவுக்காகக் கொடுக்கப்பட்டவை 'சுதந்திரம் ' என்றும் குறிக்கப்பட்டது.
விற்பனையின்போது மட்டுமின்றி, புதுப்படகைக் கடலில் இறக்கினாலும், திருமணம், தீமை (சாவு) நிகழ்வுகளிலும் மகமை வசூலிக்கப்பட்டுள்ளது.
இன்றும் மதுரை வட்டாரத்தில் 'சுதந்திரம் ' நடைமுறையில் உள்ளது. இதற்கும் ஆகஸ்ட் 15க்கும் எத்தொடர்பும் இல்லை. தத்தனேரி சுடுகாட்டில் நண்பர் ஒருவர் வீட்டு தீமை ஒன்றுக்கு சென்றிருந்தபோது, பாடையில் துணி அலங்காரம் செய்த சலவைத்தொழிலாளி சிதைக்குத் தீ மூட்டிய பிறகு வீட்டாரிடம் வந்து கேட்டார் 'சாமி! சுதந்திரம் தாங்க! '. சுதந்திரம் இப்போது அடிமை ஊழியம் செய்பவர்களின் அன்றாடக் கூலி எனும் பொருளில் நடைமுறையில் உள்ளது.
நில விற்பனை
****
நிலம் விற்கும் அக்காலத்தைய முறை பற்றி திருமலை சேதுபதி காத்த தேவரின் 15.6.1654 தேதியிட்ட செப்பேடு 'இந்நான்கெல்லைக்கு உள்ப்பட்ட நஞ்சை புன்செய் உள்பட கொள்வாருளரோ கொள்வாருளரோ என்று நான் முற்க்கூற அவர் பிற்க்கூற என் மொழிகேட்டு எதிர்மொழி மொழிந்து விற்பதற்கிசைந்து ' வாங்குபவர் கை மேலாகவும், விற்பவர் கை கீழாகவும் வைத்து விற்ற சேதியைக்கூறுகிறது.
பெண்டிர் நிலை:
****
சேதுபதிகளின் செப்பேடுகளின்படி பார்த்தால், கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு பெண்டாட்டிகளில் ஒருத்தியின் பெயர் 'காதலி ' என்று சொல்லப்பட்டுள்ளது. இது ராமேஸ்வரத்தில் உள்ள அம்மனான 'பர்வத வர்த்தினி ' யின் தமிழ்ப்பெயர் சுருக்கம் என்று தெரிகிறது. (பர்வதவர்த்தினி - மலை வளர் காதலி). தடியத்தேவனின் மனைவியின் பெயர் 'காதலி ' என்று இருக்கக்கூடும். 1710 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி இறந்தபோது 47 மனைவியரும் உடன்கட்டை ஏறி இறந்தனர்.
சேதுபதிகளின் காலத்தில் பெண்களைச் சிறையெடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. சிறையெடுப்பதன் பொருள் அகர முதலியில் 'காமக் கிழத்தியாய் / மனைவியாய் ஆக்கும்பொருட்டு ஒரு பெண்ணைக்கவர்தல் ' என்று சொல்லப்பட்டுள்ளது. வயிரமுத்து விசய ரகுநாத ராமலிங்க சேதுபதி 1478ல் 20 கல விரையடி நிலம் கொடையாகத்தந்து முத்துக்கருப்பாயி எனும் பெண்ணைக் கவர்ந்த சேதி பெரிய மடை செப்பேட்டிலும், முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20 கல விரையடி நிலம் கொடுத்து சிறையெடுத்தார். இப்பெண்டிர் சேதுபதிக்கு ஆசை நாயகியராய் இருந்திருக்கலாம்.
எட்டையபுரத்தில், விஸ்வகர்மா குலத்தினர் வணங்கும் ஒரு கன்னிதெய்வம் பற்றி ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் தரும் செய்தி, சிறையெடுப்பில் ஜமீன்களின் வரலாற்றுப்பாத்திரத்தை விளக்குகிறது. எட்டையபுரம் ஜமீன்தார், உலா வருகையில் ஆசாரி குலத்தில் பிறந்த 12 வயதே ஆன ஓர் சிறுமியின் அழகில் மயங்கி அவளைச் சிறை கேட்டுள்ளார். (அப்போது, அப்பெண் வயதுக்குக் கூட வந்திருக்காது) அப்புறம் பதில் சொல்வதாய் அக்குலத்தினர் சொல்லி வைத்தனர். குலமானம் காக்க அப்பெண்ணைக் கொன்றுவிட்டு ஊரைவிட்டு அகன்று விடத்தீர்மானித்து, அப்பெண்ணிடம், குலுக்கையில் இறங்கி தவசம் அள்ளி வரப் பணித்தனர். (குலுக்கை - தானியங்கள் போட்டு வைக்கும் குதிர். தவசம் - கம்பு - கரிசல் வட்டாரச் சொல்) குலுக்கையில் அப்பெண் இறங்கிய உடனே ஏணியை வெளியே எடுத்து விட்டனர். அப்பெண் தவசத்தினுள் புதைந்து மூச்சுத் திணறி மாண்டாள். (கம்பு உருளும் தன்மையாதலால், மனிதர்கள் அதன் மேல் நிலையாய் நிற்க இயலாது).அக்குடும்பம் ஊரைவிட்டு அகன்றது. இப்போது அக்குடும்பத்தின் கொடிவழியினர், அந்தக் குலுக்கை இருந்த இடத்தில் ஆண்டுக்கொருமுறை கன்னி அம்மனாக, அப்பெண்ணை வழிபடுகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள அம்மன்களின் வரலாறைத் தொகுத்தால், சாதிய ஒடுக்குமுறை, காதல் தோல்வி, ஆதிக்க சக்தியினரின் பாலியல் வேட்டை எனப்பலவும் வெளியாகும்.
மன்னர்களும், ஜமீன்களும் தம் பாலியல் வேட்கைக்கு என பெண்களைப் பொருட்கள் போன்று விலைக்கு வாங்கும் நிலையில்தான் பெண்டிரின் கற்பு இருந்திருக்கின்றது.
சாதி தாண்டிய காதலை 1691 ஆம் ஆண்டு செப்பேடு செப்புகிறது. இதனைக்குறித்து மற்றுமோர் ஆய்வாளர் எழுதிய கட்டுரை, கவிதாசரண் பத்திரிக்கையில் வெளிவந்து விட்டதால், அச்செய்தியின் சுருக்கம் மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகின்றது.
வேலந்தரவையூரின் வீர மூப்பன் பேத்தி வீராயி (வலையர் சாதி), இளமநேரி நயினுக்குட்டி சேர்வையுடன் (அகமுடையர்) களவுமணம் செய்து கர்ப்பமானாள். அவளை அவளது உறவினர் 'தெண்டினை பண்ணி உயிர்வதை பண்ணிப்போட்டு ' (அதாவது கொன்று) சேதுபதியிடம் சென்று, சேர்வையைப் பலிக்குப்பலி தரச்சொன்னார்கள். அந்தப்படிக்கு சேர்வைக்காரன் தங்கச்சி உடையக்காளைப் பலிக்குப் பலி தரத் தீர்ப்பாகி, உடையக்காளை உயிருடன் எரிக்கக் கட்டையில் ஏற்றியபோது வலையர்கள் மனம் மாறி உடையக்காளைக் கொல்லாமல், வலையர் சாதியில் சேர்த்துக்கொண்டு அவளை 'சாதிப்பிள்ளை ' என்று சொல்லி, சில சலுகைகளை அவளுக்கு அளித்துள்ளனர்.
இதன் மூலம், சேர்வைக்காரன் செய்த காதலுக்காக அவனின் தங்கை பழி ஏற்கவேண்டும் என்ற அளவில் நீதி இருந்தது தெரிய வருகிறது.
இன்னமும் சாதிமீறிக் காதலிக்கும் சாதி இந்துப் பெண்கள், தத்தம் வீட்டாராலேயே கொலை செய்யப்படும் நிகழ்வு நடைமுறையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுப்பட்டியில் உள்ள ஒரு நாட்டார் தெய்வச்சடங்கை ஆய்வு செய்த ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் சொல்லும் வரலாறு இவ்விடம் நோக்கத்தக்கது. அத்தெய்வத்திற்கு ஆடுகளைப்பலியிடுகின்றனர். ஆட்டை வழமைபோல் வெட்டாமல், ஓட விட்டுக் கம்புகளால் எறிந்து தாக்கிக் கொன்றே பலியிடுகிறார்கள். ஆய்வில் தெரியவந்தது என்ன என்றால், சாதி மீறி ஒரு பெண் காதலித்திருக்கிறாள். அவளின் சகோதரர்கள் அக்காதலை எதிர்க்கவே, அப்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனாள். அவளின் உடன்பிறந்தவர்கள் இம்மணமக்களைத்தேடிக் கண்டுபிடித்து வந்து, அவர்களை ஓட விட்டுக் கம்பால் எறிந்து தாக்கியே கொன்றிருக்கின்றனர். பின்னாளில் அவ்விருவரும் தெய்வமாகினர். அவர்களுக்கு செய்யும் பலியில் அவ்வரலாற்றினை 'போலச்செய்தல் ' ஆக நிகழ்த்திக்காட்டும் முகமாய் ஆடுகளை அவ்வாறே பலி தருகின்றனர்.
'கிழவன் சேதுபதியும், ஜான் பிரிட்டோவும் ' கட்டுரையில், தடியத்தேவனின் மனைவியரில் ஒருத்தியின் பெயர் 'ராணி மங்கம்மாள் ' நூலின்படி 'கதலி ' என்றிருந்தது. ஆனால் செப்பேடுகளை நோக்குகையில் இப்பெயர் 'காதலி ' என இருந்திருக்கலாம் எனத்தோன்றுகின்றது. (காதலி - பர்வதவர்த்தினி)
மத நல்லிணக்கம்:
****
கிழவன் சேதுபதியின் காலத்தில் கிறிஸ்துவப் போதகர்கள் துன்புறுத்தப்பட்ட சூழல் நிலவி உள்ளதற்கு, அவரால் கொல்லப்பட்ட ஜான் பிரிட்டோ ஓர் சாட்சியாவார். அதே காலகட்டத்தில் மதுரைச்சீமையை ஆண்ட ராணி மங்கம்மாளின் ஆட்சியில் எல்லா மதத்தினரும் சம உரிமை பெற்றிருந்தனர் என்பதற்கு, தஞ்சை மன்னருக்கு, ராணி மங்கம்மாள் எழுதிய கடிதம் சான்று.
சில சேதுபதிகள், கிழவன் சேதுபதியைப் போலன்றி, சமயம் கடந்தும் நாட்டின் நில வளங்களைத் தானம் செய்துள்ளனர்.
1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு 'கிழவனேரி ' எனும் ஊரைத் தானம் செய்தார்.
2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.
3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் 'தெஞ்சியேந்தல் ' எனும் ஊரைக் கொடையாகத்தந்துள்ளார்.
மடங்கள் பெற்ற கொடை:
****
சேதுபதி மன்னர்கள் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்த ஊர்களும், நிலங்களும் எக்கச்சக்கம்.
1) கிபி 1661 ஆம் ஆண்டில் திருமலை சேதுபதி ரகுநாதத்தேவர், 'மதுரை திருமலை நாயக்கரின் புண்ணியத்திற்கும், தம் தந்தை தளவாய் சேதுபதி காத்த தேவரின் புண்ணியத்திற்கும், தமது பெற்றோர்களின் பற்றகத்திற்குப் புண்ணியம் ஏற்படவும், திருவாவடுதுறை சைவ மடத்தின் கீழுள்ள திருப்பெருந்துறைக்கோவிலின் உஷாக்கால பூஜைக்காக, ஆதீனத்திற்கு வெள்ளாம்பற்றுச் சீமையிலிருந்து, முத்து நாட்டுச்சிமை வரை ஏராளமான ஊர்களைக் கொடையளித்தார். இதே ஆதீனத்திற்கு 1668ல் பெருங்காடு எனும் ஊரையும், 1673ல் உச்சிக்கால பூஜைக்கு 'தச்ச மல்லி ' எனும் ஊரையும் இறையிலி ஆக்கி உள்ளார்.
2) கிழவன் சேதுபதி 1678ல் ஆதீனத்திற்கு உச்சிக்கால பூஜைக்காக 'புல்லுக்குடி ஏந்தல் ' ஊரைத்தானமாக அளித்தார்.
3) 1680ல் சேதுபதி ரகு நாதத்தேவர் அவர்கள், திருமலை சேதுபதி காத்ததேவர் புண்ணியத்திற்காகவும், சாத்தக்காள் ஆயி, தம்பியாயி ஆகியோர் புண்ணியத்திற்காகவும், 'நரிக்குடி ' உள்ளிட்ட ஐந்து கிராமங்களை வரியின்றி அனுபவிக்கச் செய்தார்.
4) பொசுக்குடி செப்பேடு (காலம்: 1731) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதியால் வெட்டப்பட்டது. இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பொசுக்குடி எனும் ஊரை ஈந்த செயலை 'மடப்புறம் ' என்றது. (இதன்மூலம் மடப்புறம் என்பது சைவ மடத்திற்கு அளிக்கப்பட்ட தானம் எனலாம். மதுரையை அடுத்த மடப்புரம் எனும் ஊரும் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கலாம்). இதே சேதுபதி 1733ல் வணிகர்கள் இவ்வாதீனத்திற்கு 'மகமை ' தரச்சொல்லி திருப்பொற்கோட்டை செப்பேட்டில் சொல்லி உள்ளார்.
5) முத்துராமலிங்க சேதுபதி 1782ல் ஆதீனத்தின் ஆவுடையார் கோவில் உச்சிக்காலபூஜைக்கு சில நிலங்களையும் (ரெவ்விரண்டு குறுக்கம் நன்செய் உட்பட), தோப்புகளையும் ஆண்டனுபவிக்கச் செய்தார். வள்ளைக்குளம் எனும் ஊரினை திருவாவடுதுறை மகேசுவர பூசைக்குக் கொடையாகத் தந்தார்.
மேலும் 1706ல் சேதுபதி காத்த தேவர் கால செப்பேட்டில், அரசு ஊழியரின் ஒரு நாள் சம்பளம், மாதாமாதம், திருப்பூந்துறைக்கோவிலுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆதீன நிலங்களில் உழவர் நிலை:
****
சேதுபதி மன்னர்கள் மாதிரியான குறுநில மன்னர்களின் 'புண்ணியம் / சொர்க்கம் ' ஆசையாலேயே இத்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் வளம் பெற்ற ஆதீனங்கள் அந்நிலங்களை வைத்துக்கொண்டு என்ன செய்தனர் ?
குவிந்து கிடந்த நன்செய்களில் வேலை செய்த விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். சூரியன் எழுமுன் வயலில் இறங்கி, மறைந்தபிறகே வயலைவிட்டு வெளியேறும்படி மக்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆதினங்களின் காறுபார்கள், அம்மக்களுக்குக் கள்ள மரக்காலில் கூலி அளந்தார்கள். எதிர்ப்பேச்சுப் பேசின தலித்களுக்கு சவுக்கடியும், சாணிப்பாலும் இருந்தன.
பருவ மழை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப்போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவசாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் 'சிவத்தொண்டை ' இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை மக்கள் வாய்வழிக்கதைகளாகப் பேசிவருவது கண்கூடு.
'திருவாவடுதுறை ஆதீன மடத்து நிலங்களில் விதைத்துப் பயிரிட்டு விளைவித்துக் கொடுப்பது சாதாரண மக்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு பகுதிதான் நெல் கிடைக்கும். மடத்து நிலங்களில்தான் சிறுவிவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடியிருப்பார்கள். பயிரிடும் நிலத்தை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் ' என இம்மடத்தின் சுரண்டலை நல்லகண்ணு தனது பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
1930, 40 களில் பொது உடைமை இயக்கம் எழுந்து நின்று இம்மடாதிபதிகளின் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப்போராட வேண்டி இருந்தது.
ஏராளமாய்ப் பெருகிய சொத்தை அனுபவிக்க எப்போதுமே பெரிய மடாதிபதியும், சின்ன மடாதிபதியும் ஒருவரை ஒருவர் அழிக்கத்திட்டமிட்டு (உதாரணமாக, சமீபத்தில் திருவாவடுதுறை சின்ன ஆதீனம், பெரிய ஆதீனத்தைக் கொல்ல முயன்ற விச ஊசி வழக்கு) சைவத்திற்குப் புறம்பான பல வேலைகளை செய்தார்கள்.
அந்தணருக்கு செய்த தானங்கள்:
****
நிலங்களைப் பெருவாரியாகத் தானம் தர மறவர் சீமை ஒன்றும் முகலாய சாம்ராஜ்யம் மாதிரிப் பரந்த நாடும் அன்று. பொன் விளையும் பூமியும் அல்லதான். பெரும்பாலும் வானம் பார்த்த மானாவரி நிலங்களையே மறவர் சீமை கொண்டிருந்தது.
அந்தணர்களுக்கு இச்சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:
1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல், கீளைச்சூரநேம்பல், மாவூரணி, திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.
2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் - புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.
3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும், அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி, பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.
4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47 மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.
5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2 ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.
6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு 'பால்குளம் ' எனும் ஊரைக் கொடையளித்தார்.
7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில், சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.
8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24 பேருக்கு ராமநாதபுரம், பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.
9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.
10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.
செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க, தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 1762ல் சின்ன நாட்டான், பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.
பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்.
தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு 'அனிச்சகுடி ' 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது. இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும், தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.
1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில், அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும், திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.
உழைக்கும் மக்கள் செலுத்த வேண்டி இருந்த வரிகள்:
****
இவ்வளவு நிலங்களையும், ஊர்களையும் தந்ததால், சேதுபதியின் நிலவருவாயின் இழப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. இவ்விழப்பினை எவ்வாறு ஈடுகட்டினர் என்பதை இச்செப்பேடுகள் செப்பும் பலவகையான வரிகளால் ஊகிக்க முடிகின்றது. கற்றறிந்த ஆதிக்க வர்க்கத்தார் இவ்வாறாக ஊர்களையே வரியில்லா தானமாக ஆண்டு அனுபவித்தகாலத்தில் நாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தாரின் உழைப்பை சேதுபதிகள் வலங்கை வரி, இடங்கை வரி, மகமை, சாணார் வரி, எண்ணெய் வரி என்று விதித்து கசக்கிப் பிழிந்தனர்.
அதே நேரத்தில் அந்தணர்களுக்கும், சைவ மடங்களுக்கும் ஊர்களை எழுதி வைக்காமல் போனாலோ, அல்லது வரிகள் விதித்தாலோ, செப்பேடு சொல்வதுபோல், 'கங்கைக் கரையில் காராம்பசுவையும், பிராமணர், தாய், தந்தையரைக் கொன்ற தோசம் ' பிடித்து விடுமோ எனும் அச்சத்தினாலும், 'கோடி கெங்கா ஸ்நானம் பண்ணின ' புண்ணிய ஆசையினாலும், மறவர் சீமை கொஞ்சம் கொஞ்சமாய் மடங்களுக்கும், அந்தணர்களுக்கும் செய்த ஈகையில் கரைந்து கொண்டிருந்தது.
கிரகணத்தன்று சோறுண்ட பாவப் பரிகாரம்
****
இந்தத்தானங்களை எல்லாம் எவ்வித சிறப்புக்காரணங்களுக்காகவும் செய்யா விட்டாலும், 23-5-1737ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி செய்த கொடைக்கான காரணம் தான், மிகவும் வேடிக்கையானது.
இதை உதயனேந்தல் செப்பேடு பதிவு செய்துள்ளது.
அரசர், கிரகண நாளன்று உணவு உட்கொண்ட பாவத்தைப் போக்கவும், பெற்றோரின் புண்ணியத்துக்காகவும், கெளதம கோத்திரத்து போதாநய சூத்திரத்து ராமலிங்க நம்பியார் மகன் மங்களேஸ்வரக்குருக்களுக்குக் கொடையாக, கதயநேந்தல் எனும் ஊரினை அளித்தான்.
இதே போன்றதொரு கொடையினால்தான் தஞ்சை மன்னனால் உத்தமதானபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
சேதுபதிகளின் கடைசிக் காலம் - கையறு நிலை:
****
கடைசி சேதுபதியான முத்துராமலிங்கத்தை கிழக்கிந்தியக்கம்பெனியார் கைது செய்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 1795ல் அடைத்தனர். இவரின் ரெண்டாவது மனைவி வீரலட்சுமி நாச்சியார் இவருடன் சென்னைச் சிறையில் இருக்கையில் உண்டாகி இருந்தார். சிறையிலேயே தாம் மாண்டுபோவோம் என அறிந்த சேதுபதி, தமக்குப் பிறக்கப்போகும் வாரிசின் எதிர்காலத்தை முன்னிட்டு, கம்பெனியிடம் தம் வாரிசுக்கு பென்சன் தரக்கோரி ஒரு செப்பேட்டை எழுதி மனைவி மூலம் கம்பெனியிடம் கொடுத்தனுப்பினார்.
அதில்,
'1808 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி எழுதிக்கொடுத்த சாசனம், 1795 ஆம் வருடம் மார்ச் 4ம்தேதி நவாபு வாலா சாகிபுக்கும், மதராஸ் ஓப்போர்ட் கவர்னர் துரையவர்களுக்கும் நடந்த உடன்படிக்கை படிக்கும் 1803 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் தேதியிலும் கவர்மெண்டார் அவர்களாலே பிறப்பித்திருக்கித்திரமான உத்தரவுப்படிக்கும் கர்ப்பவதியாய் இருக்கின்ற என் பாரி வீர லட்சுமி நாச்சியாருக்கு குழந்தை பிறந்த உடன் இராமநாதபுரம் ஜெமீனுக்கு கொண்டுபோய் தமக்கை மங்களேஸ்வரி நாச்சியாரிடம் ஒப்புவித்து கவர்மெண்டு பென்சனும், ஜெமீனில் அலவன்சும் சந்ததி பரம்பரையாய் கொடுத்து பாதுகாத்து வரவும் ' என எழுதி இருக்கிறார்.
புண்ணியம் செய்வதற்காக இவரும் இவரின் முன்னோர்களும், பற்பல ஊர்களையும், நன்செய்களையும் தானமாய் அளித்தார்கள். இறுதியில் கையறு நிலைக்குப்போய் அந்நிய நாட்டின் கிழக்கிந்தியக்கம்பெனியிடம் பிச்சை கேட்டு இம்மண்ணின் மன்னன் நின்றபோது, தானம் வாங்கிச் செழித்த மக்களோ, அவர்தம் வாரிசோ, மன்னனுக்காக பரிந்து பேசவோ, வாதாடவோ வந்ததாய் சான்றுகள் இல்லை.
அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?
கிழக்கிந்தியக்கம்பெனிக்கு அடிமை ஊழியம் செய்யப் புதிதாய் ஆங்கில பாஷையைக் கற்றறிந்து கொண்டிருந்தார்கள். அன்னிய மிலேச்சக் கம்பெனியில் அடிமை சேவகம் செய்யத் துவிபாஷியாகவோ, குமாஸ்தாக்களாகவோ, அல்லது இம்மாதிரி மன்னர்களின் வீழ்வைத்துரிதப்படுத்த வக்கீல்களாகவோ மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் இச்செப்பேடுகளில் இருக்காது. ஆனால் அக்காலகட்டம் அப்படித்தான் இருந்தது.
இம்மன்னர்களிடம் இருந்து எந்தவகையான சலுகைகளையும் பெறாமல், மேலும் மேலும் வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்த உழைக்கும் மக்களும், இம்மன்னனின் முடிவால் சலனப்பட்டதாய் சேதி இல்லை.
ஐரோப்பியர் நுழைவு:
****
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு செப்பேடு 8-5-1694ல் எழுதப்பட்ட கிழவன் சேதுபதியின் செப்பேடே. இந்தத்தேதியில்தான் இலங்கையில் இருந்து இங்கு வந்து டச்சுக்காரர்கள் சேதுபதியிடம் வந்து பேசி, அவர்கள் நமது நாட்டில் உள்ள சேது நாட்டுக் கடலில் உள்ள முத்துச் சலாபங்களில் முத்துக்குளிக்கும் உரிமையைப் பெற்றனர். முதலில் முத்துசலாபங்களை தங்களுக்கு விற்றுவிடும்படி கேட்டனர். (இன்று லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது போன்று) சேதுபதி ஒத்துக்கொள்ளாமல், முத்துக்குளிக்கும் உரிமையைந்தந்து, முதல் நாள் கிடைக்கும் முத்துக்களை சேதுபதிக்குத் தரவேண்டும் என்பதே இச்செப்பேட்டில் உள்ள உடன்படிக்கையின் சாரம்.
இம்மன்னனுக்கும் இன்றைய இந்துத்துவ சக்திகளுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
கிழவன் சேதுபதி ஐரோப்பியருடன் நம் மக்களின் முத்துக்குளிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்தார். அதே நேரத்தில் கிறிஸ்தவ மதப்பிரசங்கிகளை அவர் வெறுத்தார். உதாரணம் - ஜான் பிரிட்டோ படுகொலை.
சங் பரிவாரினரும், கிறிஸ்தவ போதகர் 'ஸ்டெய்ன்ஸ் 'பாதிரியைக் கொன்றனர். அதே நேரத்தில் இவர்கள் துதிக்கும் 'பாரத மாதாவின் ' இயற்கை வளங்களான சுரங்கம், துறைமுகம், மீன் பிடிப்பு போன்றவற்றை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாட 6 ஆண்டுக்கால ஆட்சியின்போது வழிவகுத்தனர்