திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது.மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார்.“அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு.இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை:அகப்பேய் சித்தர் பாடல் – 90அகப்பேய் பூரண ஞானம்.இவர் சித்தியடைந்த திருத்தலம் : - திருவையாறு.
தியானச்செய்யுள்
இலை உடையுடன் கலை உருவாய்காட்சி தரும் காரியசித்தி சுவாமியேமாறாத சித்தியை மரப்பொந்தினில்பெற்ற மங்காச் செல்வரேஅசைகின்ற புத்தியைஇசைக்கின்ற சித்தியால்இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே.அகப்பேய் சித்தர் பூசை முறைகள்:தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் சுவானியின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.முதலில் இந்த சித்தருக்கான தியானச் செய்யுளை மனமுருகக் கூற வேண்டும். பின்பு பின்வருன் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.பதினாறு போற்றிகள்1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!3. பித்ருப்ரியரே போற்றி!4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி!5. சாந்தமாக இருப்பவரே போற்றி!6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி!7. சங்கீதப்பிரியரே போற்றி!8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!11. கஜபூசை செய்பவரே போற்றி!12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி!13. உலகரட்சகரே போற்றி!14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!15. முக்தி அளிப்பவரே போற்றி!16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி!இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய் சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.பின்பு நிவேதனமாக இளநீர் (வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பழம் பால் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்ட வேண்டும்.நிறைவாக தீபாராதனை செய்யவும்.ஸ்ரீ அகப்பேய் சித்தரின் பூசை பலன்கள்:இவர் நவக்கிரகத்தில் குரு பகவானைப் பிரதிபலிப்பவர். வியாழக்கிழமை இவரை பூசிக்க சிறந்த நாள். இவரை வழிபட்டால்,1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷ்ங்கள் அகலும்.2. பணப்பிரச்சினைகள், புத்திர பாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை போன்றவை அகலும்.3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும்.4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.5. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.6. கொடுக்கல், வாங்கல், பிரச்சினை வழக்குகள் அகலும்.7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
அகப்பேய் சித்தர் வரலாறு முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லை.