எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

உனக்குள் இருக்கிறது உன்னதம்-7

மனித வாழ்வு எதற்காக? ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது? என்று கேட்கும்போதெல்லாம், நான் உங்களுக்குக் கதைகள்தான் சொல்ல வேண்டும்.ஒருநாள் கடவுள் வேலையேதுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கோலி இங்கே விழுந்து அது பூமியானது. மற்றொன்று அங்கே விழுந்து சூரியன் ஆனது. வேறு ஏதோ செய்தார். மனிதர்கள் உருவானார்கள். இதுபோன்ற கதைகளை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே போகலாம். நான் என்ன கதைகளை உங்களுக்குச் சொன்னாலும், சிலர் அவற்றை நம்பலாம்; சிலர் அவற்றாஇ நம்பாமலும் இருக்கலாம். நீங்கள் இந்தக் கதைகளி நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வாழ்க்கை எந்த வழியிலும் வளமடையப் போவதில்லை. உங்களில் பலர் இதுவரையில் ஏதோவொன்றில் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.இங்கே இருக்கும் உங்களில் எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? (நிறைய பேர் கை தூக்குகிறார்கள்) சரி. எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்? (மிகச் சிலர்தான்). சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சரி. இந்தக் கூட்டத்தில், உங்களில் எத்தனைபேர் இரண்டு கைகள் உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்? அவர்கள் அனைவரும் ஒரு கையை உயர்த்துங்கள். உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைக் காண்பதற்கு நமக்குக் கண்களே இல்லாவிட்டால் கூட, நமக்கு இரண்டு கைகள் இருப்பதை அனுபவப்பூர்வமாய் அறிவீர்கள், இல்லையா? யாரேனும் உங்களிடம் ஒரு விவாதம் தொடங்கி, உங்களுக்கு கைகளே இல்லையென நிரூபிக்க முடியுமா? அது சாத்தியமா? இந்த விவாதம் மிகவும் சூடாகும்போது, அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், உங்களுக்குக் கைகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்துகொள்வார். உங்களுக்கு கைகள் இருப்பதை அறிவீர்கள். ஆனால் கடவுளை மட்டும் நம்புகிறீர்கள். இது ஏன்? நமக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நாம் நம்புகிறோம். சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்க்ள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும். நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். ஏதாவதொன்றைப் பற்றி ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உண்மையைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கையே உங்களுக்குள் அழிந்துவிடும்.நீங்கள் கௌதம புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருமுறை புத்தர் அதிகாலைப் பொழுதில், சூரியோதயத்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. அப்போது ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு ராமபக்தர். அவர் வாழ்க்கை முழுவ்டஹும் சொல்லிக் கொண்டிருந்தது, ‘ராம், ராம், ராம்!’ தான். வேறெதையும் அவர் சொன்னதில்லை. அவரது ஆடைகளில் கூட முழுவதுமாக ‘ராம், ராம்’ என்றே எழுதி இருந்தது. அவர் கோவிலுக்குச் செல்பவர் மட்டுமல்ல; நிறைய கோவில்கள் கட்டியவரும்கூட. வயதாக வயதாக ஒரு சிறு சந்தேகம் அவருக்கு எழுந்தது. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் ராம், ராம் என்றே சொல்லி வந்துள்ளேன். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லையென்று 30, 40, பேர் இங்கே கைதூக்கினார்கள். அவர்களுக்கும் கூட சூர்யோதயம் நடக்கின்றது, சுவாசமும் நடக்கின்றது. அவர்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்விலும் ப சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நான் வெறுமனே அமர்ந்து ‘ராம், ராம்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இவர்கள் கூறுவதைப் போல கடவுள் இல்லையென்றால்… எனது வாழ்க்கை முழுவதும் வெறுமையாகி, ஒன்றுமில்லாமல் போய்விடுமே!’ கடவுள் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் சிறு சந்தேகம் வந்துவிட்டது; அவ்வளவுதான்.ஆனால் எப்படி இந்தக் கேள்வியை புத்தரிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்பது? எனவே அவர் அதிகாலையில் இருட்டாக இருக்கும்போதே வந்து ஒரு மூலையில் நின்றவாறு, ‘கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டார். கௌதம புத்தர் அவரைப் பார்த்து ‘இல்லை’ என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் சீடர்கள் மத்தியில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற போராட்டம் அவர்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலமுறை அவர்கள் இந்தக் கேள்வியை கௌதமரிடம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாகவே இருந்துவிடுவார். இப்போதுதான் முதன்முறையாகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் ‘கடவுள் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.கடவுள் இல்லாமல் இருப்பதென்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உங்கள் வாழ்வில் நீங்கள் எது வேண்டுமாலும் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பதை கவனித்துக் கொண்டிருக்க ஒருவரும் இல்லை. உங்களை நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவதற்கு யாருமே இல்லை. இது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையா? கடவுள் இல்லையென்றால் உங்களுக்கு முழுமையான சுதந்திரம். சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம். அந்த நாள் சந்தோஷமான நாளாக இருந்தது.மாலை நேரத்தில் புத்தர் அவருடைய சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த போது, மற்றொரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு சார்வாகர். அந்த நாட்களில் சார்வாகர்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள். அவர்கள் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள். வேறு எதையும் நம்புவதில்லை. அவர்கள் உங்கள் நகருக்கு வந்து உங்களிடம் சவால் விடுவார்கள். ‘யாராவது கடவுள் இருக்கின்றார் என்று நிருபித்தால் தான் நூறு பொற்காசுகள் தருவேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து நூறு பொற்காசுகளை எனக்குத் தர வேண்டும்.” அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த வழியில் மட்டும் சம்பாதித்தார். ஊர் ஊராகச் சென்று ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என நிருபித்து வந்தார். இது அவருடைய வேலை. கடவுள் இல்லை என்பதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்து அவர் தனது துறையில் பெரிய மனிதராகத் திகழ்ந்தார்.தற்போது வயது ஆக ஆக சிறு சந்தேகம் வந்துவிட்டது. ‘எனது வாழ்க்கை முழுவதும் கடவுள் இல்லையென்றே நான் மக்களிடம் கூறி வந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால்? நான் அங்கே போகும்போது அவர் என்னை விடுவாரா? நரகம் என்று ஏதோ இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே.’ சிறு சந்தேகம்… கடவுள் இல்லையென்று அவருக்குத் தெரியும். இதனை அவரது வாக்கை முழுவதும் நிருபித்தும் வந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறு சந்தேகம்… ஒருவேளை கடவுள் இருந்தால்? எதற்கு வம்பு, நகரிலே ஞானமடைந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம். ஆகவே மாலை வேளையில் இருட்டிய பிறகு, அவர் புத்தரிடம் சென்று, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.கௌதமர் அவரைப் பார்த்து, ‘ஆமாம்’ என்று கூறினார். மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டம் சீடர்களிடையே தொடங்கியது. கடவுள் இல்லையென்று அவர் கூறியதால் காலை முதல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் மாலையிலோ கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். ஏன் இப்படி?வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும்போது, இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது, எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது. எது இல்லை என்பதைப் பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் அனுபவத்தில், இருப்பது எது?, இல்லாதது எது? என்பதைப் பற்றித் தெளிவாக வ்ரையறுத்துக் கொள்ளூங்கள். உங்காள் அனுபவத்தில் எது இல்லையோ அதனை இல்லையென நீங்கள் கூறத் தேவையில்லை. வெறுமனே ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுங்கள். நீங்கள் ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொண்டால், புறகு வளர்ச்சி ஏற்படும். தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்.இந்தியாவில் உங்களுக்குக் கடவுளைத் தெரியும். அவ்ர் எங்கிருக்கிறார் என்று தெரியும். அவ்ருடைய பெயரும் உங்களுக்குத் தெரியும்.. அவருடைய மனைவி யாரென்று உங்களுக்குத் தெரியும். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவருடைய பிறந்தநாளும் தெரியும். அவருடைய பிறந்த நாளிற்கு அவர் விரும்பும் இனிப்பு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. தற்போதிய முழுப்பிரச்சனையும் அதுதான். உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும். ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.இப்போது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில், இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர் அளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உடலையும், மனத்தையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட ஆளவிற்கு ஒரு சிஅல் கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். இதைத் தாண்டி நீங்கள் எதிஅயும் உணரவில்லை. மற்றாவை எல்லாமே கற்பனைதான். இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது. உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை? என்று பாருங்கள். உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது மிக மிக அவசியமானது. இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக