எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

பல்லவர்

தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக