எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சித்தர்களை தேடி ! சித்துக்களை நாடி !

சித்தர் தேசமான சதுரகிரி/சுந்தரமகாலிங்க மலையை பற்றி சில தகவல்களை மற்றொரு இழையில் பகிர்ந்துள்ளோம். சித்தர்களை பற்றிய எனது ஆர்வத்தால் சேகரித்த சில தகவல்களை தொடர்ச்சியாக பதிக்கிறேன். தமிழக்கத்தை சுற்றிலும் மலைகளிலும்,குகைகளிலும் வாழ்ந்து சிலர் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் மேலும் பலர் பற்றிய குறிப்புகள் செவி வழியாக பிரதேச மக்களிடையே காணப் பெறலாம். சதுர கிரியை சுற்றி உள்ள மக்களிடம் சேகரித்த விசயங்களை , சித்தர் நூல்கள் கண்டு சேகரித்த விசயங்களை காலம் கிடைக்கும் போது பதிகிறேன் சித்தர்கள் என மக்களால் நம்பப் படுபவர்கள் முறையேஅகத்தியர் போகர் காக புஜண்டர்உரோம முனி சித்தர்வல்லப சித்தர் யாக்கோபு சித்தர் கோரக்கர்மச்ச முனிகருவூரார்பின்னாகீசர்சிவ வாகியர் காலாங்கி நாதர்நந்தீசர்கொங்கணர்சட்டை முநி பிராந்தர்அகப்பேய் சித்தர்தேரையர்பாப்பாட்டி சித்தர்குதம்பை சித்தர்புலிப்பாணி சித்தர் அழுகினி சித்தர் கல்லுளி சித்தர்கமல முனி திருமூலர் சிவளிங்கேச்வர சித்தர்பசுமடத்துக் கோனார் சித்தர்புலத்தியர்போடோ சித்தர்சட முடி தம்பிரான் சித்தர்வேப்பிலை கட்டி சித்தர்கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர்பதஞ்சலிபல்குனி ருத்ர சித்தர்பொன் முதிரையர்நாடன் கோபால நாயகன்பட்டினத்தார்சப்த கந்தலிங்க சித்தர்கடுவெளி சிதார்சித்தர் சாங்க தேவர்மகானு பாவலு சித்தர்மலைப் பீடான் சித்தர்பெருமானத சீதா சுமாகிகள் தாயுமானவர்முது வடுக நாத சித்தர்சதா சிவ பிரமேந்திரர்சிலம்பாகினி சித்தர்பேத நாராயண சித்தர்இடியாப்பா சித்தர்சிவபெருவால சித்தர்பாம்பனியாயான் சித்தர்காண தனனான் சித்தர்பாக்கர்இடைக்காடர்அருநாசால சுவாமி இவர்களை பற்றி தெரிந்த கருத்துகளை பகிர்வோம். சதுரகிரி மலை சிறு வயது முதல் பரிட்சயமானதால் துல்லியமான அங்கு உள்ள சித்தர்கள் குகைக்களை,அவர்களா பற்றிய தகவல்கள கொடுக்க முடியும் இன்ன பிற சித்தர்கள் செவி வழி நூல் வழி அறிந்த செய்திகளை படி படியாக பதிகிறேன்.வத்திராயிருப்பில் இருந்து சதுரகிரி மலையின் அடிவாரமான தானிப்பாரையின் ஆரம்பித்து பதினான் மைல்கல் மலைப் பாதையில் ஏறினால் சுந்தர மகாலிங்கம் ஏழு மலை சூழ தரிசிக்கலாம். அதன் வழியில் உள்ள சித்தர் உறைந்த குகைகளை,இன்று சித்தர்கள் சில சாமியார்கள் வாழும் ஆசிரமங்களை காணாலாம் .தானிபாரையில் மலை ஏறியவுடன் அத்திரிமகரிஷி ஆசிரமம் ,சதுரகிரி செல்லும் வழியில் கயிலாசகிரி பகுதியில் மச்ச முனிவர் ஆசிரமம் , சந்திரகிரி வன பகுதியில் கொரக்க முனிவர் ஆசிரமம் , விஷ்ணு கிரி பகுதியில் ராமதேவர் ஆசிரமம், மற்றும் மேருகிரி பாதையில் துர்வாச ரிஷி ஆசிரமம் . சுந்தர மகாலிங்கம் கோயிலின் வடக்கே சந்தன மகாலிங்கார் கோயில் உள்ளது.இங்கு பார்வதி தீர்த்தம் மிக பிரசித்தம். அக்காலத்தில் பார்வதி நீராடி சிவனை பூஜித்தாதாக கருதப்படும் வற்றா சுனை. இங்கு சட்டை முனிவர் குகை உள்ளது சதுரகிரியின் வடக்கே மகேந்திரகிரி மலை உள்ளது இங்கு போக மரிஷி ஆசிரமம் , கும்ப மலையில் கும்ப முனிவர் குகையும் உள்ளது .மழையின் வடக்கே மற்றொரு குன்றான சஞ்சீவி கிரியில் புசுண்டர் மகரிஷி ஆசிரமும் , இந்திரகிரி மலையில் உரோமகிரி ஆசிரமும், யூகி முனிவர் ஆசிரம் மேற்பக்கம் கயிலாசகிரி மழையில் சுந்தரானார் ஆசிரமும்,அழகானந்தா ஆசிரமும் இருந்ததாக கூறுவார் .இங்கு உள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் , ஆசிரமங்கள் இருந்ததாகவும் மலை வாழ மக்கள் , ஊர் மக்கள் சொல்வார்..சிலனவர்றிற்கு சென்று உள்ளேன். கோயிலுக்கு தென் பக்கம் உள்ள சன்னாசி வனம் மிக பிரபலம். சதுரகிரி என்ற பெயர் சுற்றிலும் ஏழு குன்றுகள் வெவேறு பெயர்களில் சூழ அமைந்து இருப்பதால் வந்தது. இது போக இன்னும் பத்துக்கும் மேற்ப்பட்ட வனங்கள், குகைகள் உள்ளன .. தமிழாக அரசால் அறிவிக்கப்பட்ட "பாதுகாக்கப்பட்ட மூலிகை வனம் " இந்த சதுரகிரி மலைசிறுத்தைகள்,காட்டு பன்றி, காட்டு எருமைகள் , கரடி, கோடை காலங்களில் யானைகள் கூட்டத்தை காணலாம். தேனி ,கம்பம் வழியாக குறுக்கு பாதையில் இந்த மழையை அடையலாம். இதன் அருகே கொவிலாறு அணையும், பிளவக்கள் அணையும் மிக பிரபலம் . போகர் !! சித்தர்களில் சிறந்த சித்தரான போகரை பற்றி சிலனவ்றை சித்தர் பாடல்கள்,பெரிய நாகை கோவை, காண மஞ்சரி தொகுப்புகள் இருந்து குறிபெடுத்து கொடுத்துள்ளேன் அகஸ்தியர் பன்னிரெண்டாயிரம் நூலில் போகரை பற்றி"சிந்தான சித்து முனி போகநாதன்சிறந்த பதிநேன்ன் பேரில் உயர்ந்த சீலன்கத்த னென்னும் காலங்கி நாதர் சீடன்கனமான சீன பத்திக் குகந்த பாலன்குத்தான் அதிசியங்கள் யாவர்ருந்தான்மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன் " இவர் சீன தேசத்தை சார்ந்தவர் என்றும் சீனாவில் துணி வெளுக்கும் மரபினர் வழியில் வந்தவர் என கூறப்படுகிறது இன்னொரு குறிப்பு இவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் பின் சீன சென்று அங்கு பல காலம் தங்கி சீன நூல்களை இயற்றி மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து பழாணி மலையில் நவபாஷன முறையில் சிலையை தயாரித்தவர் இவர் எனவும் கூறப்படுகிறது "போகர் சத காண்டம் "என்னும் நூலில் இவருக்கு சீனாவில் போ -யான் என்றும் வா-ஒ-ஸியூ என்ற பெயரில் தலை சிறந்த ந்ஜானியாக வாழந்தாராகவும் குறிக்கப் பட்டுள்ளது.போகர் தம் சீடர்கள் 63 பேருக்கு அஷ்டாங்க யோகங்களை கற்பித்து அதனை பரிட்சித்து பார்க்க சொன்னதாக உண்டு . இவர் என்றும் இளமையாக இருக்கும் காய கல்ப முறையை கற்று தேர்ந்தவர். இவர் மேரு மழையில் வாழ்ந்த காலங்கிநாதரின் சீடராகவும் இருந்தார் . இவர் இறந்தவரை உயிர்பிக்கும் சந்ஜீவனி மூலிகை முறையை தெரிந்து கொள்வதற்காக பலரிடம் சீடராக சேர்ந்து பல சாபங்களை வாங்கி கொண்டதாக தெரிகிறது.பழனியில் ஒன்பது வித கூட்டு பொருளை வைத்து நவபாஷன முறையில் விக்கிரகம் வடித்தார் எனவும் திருசென்கோடு அர்த்த நாரீசவரை உருவாக்கிவரும் இவரே என சொலபடுவது உண்டு .புலிப்பாணி சித்தர் இவரின் சீடர் ஆவர். போகரை அகத்தியரின் சிதார் என அபிதான சிந்தாமணி நூல் கூறுகிறது .போகர் சமாதி பழனி ஆண்டவரின் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் உள்ளது போகர் இயற்றிய நூல்கள் முறையே போகர் சப்த காண்டம், போகர் நிகண்டு,போகர்ஜன சாகரம்,போகர் கற்பம், போகர் இரண வாகடம்,போகர் முப்பு சூத்திரம், இநூல் பட்டியல் அகத்தியரின் சவ்மிய சாகரத்தில் உள்ளன கோரக்கர் "சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை சுந்தரனார் வசிஷ்ட மகரிச்கியாருக்குபுல்லவே காணக் குற ஜாதியப்பா புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை வெல்லவே அனுலோமன் என்னலாகும்வேதாந்த கோரக்கர் சித்து தாமும்நல்லதொரு பிரகாசமான சித்து " என போகர் 7000 நூலில் கோரக்கர் மகரிஷிக்கும், குறபென்னுக்கும் பிறந்ததாக வரலாறு கூறுகிறது.மச்ச முனியின் சீடரான கோரக்கர் எழுதிய நூல் "கோரக்கர் வைப்பு" என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சித்தர்கள் தாம் கண்ட வைத்திய முறையை எளிதில் புரிந்து கொள்ள இயலாத படி மறை பொருளாக பாடுவார். அனால் கோரக்கர் அனைவரும் புரிந்து கொள்ளும் படி எளிய நடையில் எழுதி வைத்ததாகவும் அது பிறர் கையில் கிடைத்தால் ஆபத்து என அவர் நூல்களை களவாட சித்தர்கள் த்ரண்டு வந்த பொது கண்ஜாவையும்,அரிசியையும் அரைத்து அடை சுட்ட கொடுத்து அவர்களை மயங்க வைத்து சில நூல்களை காப்பர்ரினர் என கதை உண்டு .கஞ்சாவை காயகல்ப முறைகளில் ஒன்றாக பயன்படுத்தியவர்.இவர் கோரக்கர் சந்திர ரேகை,கோரக்கர் முத்தாரம்,கோரக்கர் கற்பம்,கோரக்கர் அட்டகர்மம்,கோரக்கர் தண்டகம் போன்றன வரத நாடு என்னும் காட்டுக்கு சென்ற கோரக்கர் அங்கு பிரம்ம முனி எனும் சித்தரின் நட்பு கிடைக்கபெர்று இருவரும் சேர்ந்து பல சித்துக்கள் செய்தனர் என கூறுவார்.புதுசெரியில் உள்ள கோர்க்காடு எனும் ஊரில் கோரக்கர் தவம் செய்த ஊர் என கூறி அங்கே அவர் சமாதி அடைந்ததால் ஆவூர் கோர்க்காடு என்ப்படுவதாக கூறுவார் உரோம ரிஷி !"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி ஞ்aல வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே " என உரோம ரிஷி ஞ்அனம் கூறுகிறது உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார். புசுண்ட மாமுனிவரின் சீடர். இவர் ஒரு முறை இறைவன் மேல் உள்ள கோபத்தால் நீராடாமல் கோயிலுக்கு செல்ல முற்படுகையில் இறைவன் சித்தியால் கோயிலுக்க் வெளியே தடுக்கப்பட்டு "புறதூய்மையை விட அகத்தூய்மை இன்றியமையாதது" என உணர்தபடாராம் . அக்காலத்தில் சித்தர்களாக,ரிஷிகளாக பலரும் காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று ,நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரேனவும் அவர்களிடையே ஞ்aனம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலறேனவும் உரோம ரிஷி ஞ்aனம் சொல்கிறது "காடேரி மலையேறி நதிகளாடிகாய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே " இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம் ,வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போற நூல்களை எழுதியுள்ளார்அழுகணிச் சித்தர் !!இவர் பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி போல அமைந்து இருப்பதால் அவருக்கு அழுகணி சித்தர் என பெயர் வந்திருக்கலாம் என கூறுவார் அழுகணி சித்தர் பாடல்கள் முறையே "பையுரிலேய்ருந்து பாழுரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த விடறியேன் மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் பையூரும் மெய்யூர்ம் என் கண்ணம்மா பாழாய் முடியாதோ " இவர் பாடல்களில் இருக்கும் அழகையும் , அணியையும் காரணமாக் வைத்து அவருக்கு அழகணி சித்தர் என பெயர் வந்து அதுவே மருவி அழகுனி சித்தர் என மாரியதாக் கூறுவார்.இவர் பாடல்கலில் அழுகன்னி ,தோழுகன்னி மூலிகைகளை மிகுதியாக கையாண்ட்துள்ளார்.இவர் பெயரில் 32 கலிதாழிசைகள் உள்ளன . வாசியோகம் ,காய சித்தி முறை பற்றி இவர் பாடல்கள் விளக்குகின்றன இவர் அழுகணி சித்தர் பாடல், ந்ஜான சூத்திரம் , அழுகன் யோகம், அழுகன் வைத்தியம் போன்ற நூல்களை படைத்துள்ளார் இவர் நாகப்படினத்தில் உள்ள சிவ பெருமான் கோயில் வளாகத்தில் சமாதி அடைந்துள்ளார் கல்லுளி சித்தர் "பிரம்மா சொரூபத்தை நாடு - உன் கர்ம வினையோட வழிதன்னை தேடு எட்டி பழுத்தாலும் என்ன -காசுஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன ?கட்டி வராகநிருன்தென்ன - அதைக்காவல்கள் போட்டு நீ காத்திருன்தென்ன? " கல்லுளி சித்தர் பாடல் இவ்வாறு விரிகிறது இவரை கல்லடிச் சித்தர் எனவும் கூறுவார் . இவரின் ஞ்ஜானக் கருந்துக்களை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இவரை கல்லால் அடித்ததாக சொல்லுவர்.இவர் அக்காலத்தில் ஒரு சீர்திருத்தவாதியாக இரூந்திருக்கிறார் ஒரு சீர்திருத்த நிகழ்வு !! மிகுந்த தாகமாயிருந்த கல்லுளி சித்தர் சீடன் ஒருவன் ஒரு அந்தண பெண்மணி கொண்டு வந்த நீரை எடுத்து தாகத்தின் கொடுமையால் பருகி விட்டன். உடனே அந்த பெண் அந்த நீரை கொட்டிவிட்டு வேறு நீர் எடுக்க சென்றால் .மேலும் அந்த பெண் " வேதம் ஓதும் அந்தணன் வாய் எச்சில் நீரை பருகக் கூடாது" என்பது வேத வாக்கு என்று கூறி சென்றால் அதற்கு அந்த சீடன் " புனிதமான வேதம் ஒதுவிப்பவர்கள் அதன் புனிததாலேயே சிறப்பு பெறுகிறார்கள் அன்றி உண்ணும் உணவில் ,நீரில் அல்ல " என அந்த அந்தண பெண்மணியிடம் சொல்லி சென்று தன் குருவான கல்லுளி சித்தரிடம் முறை இடுகிறான். கல்லுளி சித்தர் அந்த சீடனுக்கு வேதம் சொல்லி கொடுத்து நாவினால் ஒதப்பட்டாலும்" வேதம் மட்டும் புனிதமுடையது" என்று வேதியரின் கர்வத்தை அடக்கியதாக ஒரு கதை உண்டு.மச்ச முனி சித்தான சித்து முனி மச்சனப்பாசீருலகில் நெடுங்கால மிகுந்த சித்து சத்தான திறேகமத்தை நம்பா மாற்றான் தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம் நித்திய முகமதி கட்கு அன்ன தந்து பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்ச முனி பலரிடம் சிஷ்யராக் இருந்திருக்கிறார் .. இவர் காக புகண்டரிடம் உபதேசம் பெற்றதாகவும் ,போகரிடம் சித்துக்களை கற்றதாகவும் உண்டு .. நீர் வாழ உயிரினங்களுக்கு மச்ச முனி சத் குருவாக இருப்பார் என கதை உண்டு . இவர் எழுதிய நூகள் முறையே மச்ச முனி கடை காண்டம் ,மச்ச முனி நகண்டு போன்றவை .. இவர் திருபரங்குன்றத்தில் ச்மாதி அடைந்தாதாகவும் , திருவானைக்காவில் சித்தியடைந்ததாக கூறுவார்

கருத்துகள் இல்லை: