எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

முதல் பாண்டியப் பேரரசு

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி களப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான். புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் சோழர் மற்றும் பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.
தொடர்ந்து பராந்தக வீர நாராயணனும்(கி.பி 880 - 900) மாறவர்மன் ராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் இரண்டாம் ஆதித்த சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக