எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

வியாழன், 8 அக்டோபர், 2009

புதுகோட்டை கல்வெட்டொன்று

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப் பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு 'காரையூர்ப் பறையன்' என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல் பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவு செய்துள்ளனர். (IPS 843)குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். 'குதிரைக்கிப் புல்லிடும் பறையர்' என்று சோழர் காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.உழுதொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பறையர்கள் 'உழப்பறையர்' என்று அழைக்கப்பட்டனர். இதனால் பறையர்கள் வெவ்வேறான தொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும் புலனாகிறது.அரசன், பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார். (தெ.இ.க.26, க.எ.253) பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை 'அரையன் அணுக்க கூவன் பறையனேன்' என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது. (தெ.இ.க. 14; க.எ. 56)சோழ சேர்வைக்காரன், அவன் மனைவி கொண்பொடிக்காரி ஆகியோருக்கு புல்லாங்குடியிலுள்ள பெரியகூத்தன், சின்னக்கூத்தன், ராக்கக் குடும்பன் ஆகிய மூவரும் தங்கள் ஊரிலுள்ள அம்பலத்தை விற்றுவிடும்படி ரகுநாத சேதுபதி ஆணையிட்டார். இதன்படி ஐம்பது பணத்திற்கு மூவரும் அம்பலத்தை விற்றனர். மேலும் அங்கு புதிதாய் கண்மாய் வெட்ட நூறு பணம் வழங்கப்பட்டது. அங்கு புதிதாகக் குடியேறும் கைக்கோளக்குடி மூன்றுக்கு ஐந்து பணம் வீதம் பதினைந்து பணமும், புதிதாய் குடியேறிய பள்ளர்குடி ஒன்றுக்கு மூன்று பணமும் ஆக நூற்றியெண்பது பணம் மூவரிடமும் வழங்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு செப்பேடு (21-5-1696) பின்வரும் மூன்று செய்திகளை நமக்கு உணர்த்துகிறது.1. புதிய ஊர்களை வேளாண்மை செய்ய ஏற்கனவே இருந்த தங்கள் உடைமையான அம்பலத்தை விற்கும்படி குடும்பர்கள் மூவருக்கும் சேதுபதி மன்னன் கட்டளையிட்டுள்ளான்.2. புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக