எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

புதன், 7 அக்டோபர், 2009

புதுக்கோட்டை


இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அஞ்ஞான விமோச்சனியாறு, உய்யங்கொண்டான், அம்புலியாறு, கோரையாறு, சூறையாறு முதலிய காட்டாறுகள் ஓடுகின்றன. பெரும் மழைக்காலங்களில் மட்டுமே இவற்றில் தண்ணீர் ஓடும். மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கருங்கல் குன்றுகள் 'மலைகள்' என்று அழைக்கப்படுகின்றன. பல ஊர்கள் மலை என்ற அடைமொழியுடன் விளங்குகின்றன - குடுமியான்மலை, நார்த்தாமலை, விராலிமலை, தேனிமலை, பிரான்மலை இந்த குன்றுகளில் தாவரவளம் மிகவும் குறைவு. மாவட்டத்தில் மிக உயரமான குன்று பிரான்மலையில் உள்ளதாகும்.
நார்த்தாமலையில் பரந்து காணப்படும் குன்றுகளில் நல்ல வகைக் கருங்கல் கிடைக்கிறது. செவலூர், அம்மா சமுத்திரம், குன்னத்தூர் மலை, செம்பாட்டூர், விராலிமலை, நெடுங்குடி, குடுமியான்மலை, திருக்கோகர்ணம், வையாபுரி, குமரமலை, குன்னாண்டார்கோவில், மலையடிப்பட்டி, அரிமளம், திருமயம், சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலும் சிறிய கருங்கல் குன்றுகள் உள்ளன. நார்த்தாமலையில் உள்ள சிறு குன்றுகளில் பலவகையான மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன.
பொருளடக்கம்[மறை]
1 வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
2 பிராமிக் கல்வெட்டு
3 சங்ககாலம்
4 புதுக்கோட்டையில் ரோமாபுரி
5 களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
6 முதல் பாண்டியப் பேரரசு
7 பல்லவர்
8 முத்தரையர்
//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக