எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

வியாழன், 8 அக்டோபர், 2009

ராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் 19 ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.ராமநாதபுரத்தை கி.பி.1725ல் ஆண்ட முத்து விஜயரகுநாதசேதுபதி இலக்கியத்திலும் கலையிலும் ஈடுபாடு உடையவர். இதனால் ராமநாதபுரம் அரண்மனையின் மையப்பகுதியில் உள்ள ராமலிங்கவிலாசத்தில் அழகிய ஓவியங்களை தீட்ட செய்தார்.
இதில் புகழ்பெற்ற கோயில்கள், ராமாயண, பாகவத காட்சிகள், மற்றும் சேதுபதி வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. ரகுநாத சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் நடந்த போர், சேதுபதிக்கு மதுரை நாயக்கர் ரத்தின பட்டாபிஷேகம் செய்தது, அவரை மேலைநாட்டவர்கள் வந்து பார்த்தது போன்றவை ஓவியத்தில் இடம் பெற்றுள் ளன. மேல்மாடியில் உள்ள ஓவியங்களில் சேதுபதி இசை நடனம் கண்டுகளிப்பது அவரது அகவாழ்வின் சில நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
ராமலிங்கவிலாசத்தில் கட்டபொம்மனை ஜாக்சன்துரை கைது செய்ய முயன்றபோது தப்பினார். அப்போது விவாதம் நடந்த தர்பார் மண்டபமும் மக்களின் பார்வைக்காக உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க பல நிகழ்வுகள் நடந்த ராமலிங்கவிலாசத்தில் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்திய ரோமானிய பானை ஓடுகள், 17ம் நூற் றாண்டில் பயன்படுத்திய சேதுபதி செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்களான கட்டாரி, மரவளரி, வாள், கேடயம், துப்பாக்கி, கத்திகள், மாப் பிள்ளை கல், ஈட்டிகள் என பல்வேறு பொருட்களும் பார்வைக்காக உள்ளன.
இது மட்டுமன்றி திருமலை நாயக்கருக்கு ரகுநாதசேதுபதி உறுதுணையாக இருந்ததால் "திருமலை' என்ற பட்டம் கொடுத்து தங்கத்திலான ராஜராஜேஸ் வரி சிலையையும் தந்தார் நாயக்கர். இந்த அம்மன் தான் சேதுபதிகளின் குலதெய்வமாக இருந்து உள்ளது. இதுவே இன்றும் அரண்மனையில் கோயிலாக வீற்றுள்ளது .ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் ராமலிங்கவிலாசத்துக்கு ஒருமுறை சென்றுவந்ததாலே வரலாற்று சிறப்புமிக்க பல தகவல்கள் கிடைப்பதுடன் மன்னர்கள் ஆண்ட அரண் மனை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட் கள், கலை ரசனைகளையும் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக